.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

வரும் மாதங்களில் அமீரகம் மற்றும் வளைகுடா நாடுகளில் அதிக வேலை வாய்ப்பு!

Unknown | 1:00 AM | 0 comments


அமீரகத்தில் உள்ள நிறுவனங்களில் மூன்றில் இரண்டு நிறுவனங்கள் வரும் 3 மாதங்களில் வேலைக்கு புதிய ஆட்களை தேர்வு செய்யும் என்று வேலை வாய்ப்பு இணையதளமான பைத்.காம் செய்த சர்வே மூலமாக தெரிய வந்துள்ளது. 67% நிறுவனங்கள் நிச்சயமாக அல்லது அனேகமாக புதிய ஆட்களை தேர்வு செய்யலாம் அதில் 64% நிறுவனங்கள் 6லிருந்து 10பேரை தங்கள் நிறுவனத்திற்கு புதிய வேலைக்கு தேர்வு செய்யலாம். இந்த சர்வே வேலை தேடி அமீரகம் வருபவர்க்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுக்கும்.

சர்வேயில் கலந்து கொண்ட 218 அமீரக நிறுவனங்களில் 75% நிறுவனங்கள் வரும் 3 மாதம் முதல் ஒரு வருடத்திற்குள் புதிய வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும் இதில் 21% நிறுவனங்கள் 6லிருந்து 10பேரை தங்கள் நிறுவனத்திற்கு தேர்வு செய்யலாம். இதில் 36% பேர் ஜூனியர் எக்ஸிகியூடிவ் வேலைக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

உடனடியாக தேர்ந்தெடுக்கப்படும் வேலைகளில் 19% சேல்ஸ் மேனேஜர் வேலைக்கும், 15% கஸ்டமர் சர்வீஸ் பிரதிநிதிகளுக்கும்,14% மனித வள மேம்பாட்டு வல்லுநர் வேலைக்கும்., 14% ப்ராஜெக்ட் மேனேஜர் வேலைக்கும் 14% எக்ஸிகியூடிவ் அஸிஸ்டென்ட் வேலைக்கும் தேர்ந்த்டுக்கப்படலாம்.

மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா நிறுவனங்களில் 62% நிறுவனங்கள் நிச்சயமாக அல்லது அனேகமாக புதிய ஆட்களை வரும் 3 மாதங்களுக்குள் தேர்வு செய்யலாம். 41% பன்னாட்டு நிறுவனங்கள் நிச்சயமாக வேலைக்கு ஆட்கள் என்று தெரிவித்துள்ளன.

பொதுவாக வளைகுடா நாடுகளில் வரும் 3 மாதத்திலிருந்து 1 வருடத்திற்குள் வேலை வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக வேலை வாய்ப்பு இணையத்தின் துணைத் தலைவர் சுஹைல் தெரிவித்துள்ளார். இது இந்த நாட்டிலுள்ள வல்லுனர்களுக்கு உலகின் மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்களில் கால் பதிக்கும் வாய்ப்பாக அமையலாம்.

37% பொதுத்துறை நிறுவனங்கள் அடுத்த 3 மாதங்களுக்குள் வேலைக்கு ஆட்கள் எடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளன.பெருபாலான நிறுவனங்கள் ஜூனியர் அல்லது மிடில் லெவல் எக்ஸிகியூடிவ் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும்.

இந்த சர்வேயில் கலந்து கொண்ட மற்ற வளைகுடா நாடுகளிலும் வேலை வாய்ப்பு நன்றாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. சர்வேயில் கலந்து கொண்ட 342 சவுதி அரேபிய நிறுவனங்களில் 40% நிறுவனங்கள் நிச்சயமாகவும் 31% நிறுவனங்கள் அனேகமாகவும் அடுத்த 3 மாதங்களில் வேலைக்கு ஆட்கள் எடுப்பதாக தெரிவித்துள்ளன.

கத்தார் நிறுவனங்களில் 35% நிறுவனங்கள் நிச்சயமாகவும் 24% நிறுவனங்கள் அனேகமாகவும், குவைத் நிறுவனங்களில் 35% நிறுவனங்கள் நிச்சயமாகவும் 24% நிறுவனங்கள் அனேகமாகவும், ஒமான் நிறுவனங்களில் 33% நிறுவனங்கள் நிச்சயமாகவும் 26% நிறுவனங்கள் அனேகமாகவும்,பஹ்ரைன் நிறுவனங்களில் 20% நிறுவனங்கள் நிச்சயமாகவும் 14% நிறுவனங்கள் அனேகமாகவும் அடுத்த 3 மாதங்களில் வேலைக்கு ஆட்கள் எடுப்பதாக இருப்பதாகவும்தெரிவித்துள்ளன.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1