துபாய்க்கு புறப்பட்ட ஏர்-இந்தியா விமானம் என்ஜின் கோளாறால் அவசரமாக தரையிறக்கம்: 186 பயணிகள் உயிர் தப்பினர்!
நேற்று மாலை 4.30 மணிக்கு கிளம்ப வேண்டிய இந்த விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டதால் விமானம் புறப்பட தாமதமானது. கோளாறு சரிசெய்யப்பட்ட பின் மீண்டும் இரவு 7:43 மணியளவில் மீண்டும் துபாய்க்கு புறப்பட்டது அந்த விமானம்.
எனினும் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திற்குள் அதன் என்ஜினில் மறுபடியும் கோளாறு ஏற்பட்டது. இதனால் விமானம் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு திரும்ப வரவழைக்கப்பட்டது. இரவு 10:30 மணியளவில் விமானம் பத்திரமாக தரையிறங்கியது. அதில் பயணம் செய்த 186 பயணிகளும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
தற்போது விமானத்தில் ஏற்பட்டுள்ள பழுதை சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. கோளாறு சரிசெய்யப்பட்ட பின் நாளை இந்த விமானம் தனது இலக்கை நோக்கிய பயணத்தை தொடரும் என விமான நிலைய அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
Category: மாநில செய்தி

0 comments