பெரம்பலூர் அருகே கார் மோதி இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண் சாவு!
பெரம்பலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் பெண் புதன்கிழமை உயிரிழந்தார்.
பெரம்பலூர் மாவட்டம், வி.களத்தூர் அருகே உள்ள மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கவேல். இவரது மனைவி சின்னம்மாள் (45). இருவரும் புதன்கிழமை மாலை மேட்டுப்பாளையம் கிராமத்திலிருந்து பெரம்பலூருக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர்பந்தல் அருகே வந்தபோது, சென்னையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற கார் அவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சின்னம்மாள் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். தங்கவேல் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து பெரம்பலூர் போலீஸார் வழக்குப்
பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Category: மாவட்ட செய்தி


0 comments