புனித ஹஜ் பயணத்திற்கான சேவை வரியை ரத்து செய்தது இந்திய அரசு. யாத்திரிகர்களுக்கு பயண கட்டணம் குறைகிறது!
இந்தியாவில் இருந்து புனித ஹஜ் பயணம் செல்வோருக்கான ஏற்பாடுகளை ஹஜ் கமிட்டி செய்து வருகிறது.
இந்த புனித பயணத்திற்கான சேவை வரியை மத்திய அரசு ரத்து செய்து நேற்று அறிவித்தது.
இந்தியாவில் தற்போது 12 சதவீதம் சேவை வரி வசூலிக்கப்படுகிறது. மத்திய அரசு அறிவிப்பு மூலம் இனிமேல் இந்த புனித பயணிகளுக்கு சேவை வரிச்சலுகை கிடைக்கும்.
ஹஜ் கமிட்டி போன்று இந்துக்களுக்கான கைலாஷ் மானசரோவர் பயணம் மேற்கொள்வோருக்கான ஏற்பாடுகளை குமோன் மண்டல் விகாஸ் நிகாம் நிறுவனம் செய்து வருகிறது.
இந்த நிறுவனங்களுக்கு சேவை அடிப்படையில் இந்த வரிச்சலுகை வழங்கப்படுவதாக மத்திய அரசின் வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.
சேவை வரி ரத்து செய்யப்பட்டதன் மூலம் ஹஜ் புனித யாத்திரை செல்வோருக்கான பயண கட்டணம் மேலும் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது
Category: மாநில செய்தி


0 comments