யுவன் சங்கர் ராஜாவின் மத மாற்றத்துக்கு ஏன் இத்தனை எதிர்ப்பு!
கடந்த மூன்று நாட்களாக தமிழ்ஹிந்து மற்றும் தினமலர் நாளிதழில் இந்த செய்தி முதல் பக்கத்தில் வந்தாலும் வந்தது அதற்கு வரும் பின்னூட்டங்களோ 200 ஐ தாண்டி இன்றும் தொடர்கிறது. அதில் யுவனை தரக்குறைவாக திட்டியும் பல உள் நோக்கங்க
ள் கற்பித்தும் பார்பனர்கள் இடும் பின்னூட்டங்கள் சொல்லி மாளாது. ஏன் பார்பனர்கள் இதில் இவ்வளவு அக்கறை எடுக்கிறார்கள் என்று என்றாவது யோசித்தோமா?
சீக்கியராகவோ, பவுத்தராகவோ, கிறித்தவராகவோ நீங்கள் மாறினால் அதனால் பார்பனர்களுக்கு எந்த சங்கடமும் இல்லை. ஏனெனில் மேலே சொன்ன மதங்களை எல்லாம் என்றோ இவர்கள் இந்து மதத்தின் பிரிவுகளாக மாற்றி விட்டனர். பரிசுத்த நாடாரிலிந்து அனைத்து சாதிகளையும் கிறித்துவத்துக்கு என்றோ கொண்டு வந்து விட்டனர்.
தங்களின் உயர் சாதி அந்தஸ்து கீழிறங்காமல் இருந்தால் இந்த எதிர்ப்பைக் காட்ட மாட்டார்கள். இஸ்லாத்தில் இந்த பந்தா பலிக்காது. இஸ்லாம் இங்கு அதிகரித்தால் கோவில்கள் பொலிவிழக்கும். காலப் போக்கில் மணி ஆட்ட நம்மையும் அனுமதிக்க மாட்டார்கள். பிராமணன் என்று கூறி தலையில் பிறந்தவனாக நம்மை இனி எவரும் மதிக்க மாட்டார்கள். உடல் உழைப்பு சார்ந்த வேலைகளை செய்ய வேண்டி வரும். உடல் உழைப்பு இல்லாமல் இத்தனை காலம் ஓட்டி விட்டோம். சொச்ச காலத்தையும் இதே போல் ஓட்ட வேண்டும் என்றால் இஸ்லாம் வளராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதாலேயே வானத்துக்கும் பூமிக்கும் யுவன் பிரச்னையை வைத்து தை தை என்று குதிக்கிறார்கள். காவல் துறையில் மேல் மட்டத்திலுள்ள பார்பனர்களை தூண்டி விட்டு அப்பாவி இஸ்லாமிய இளைஞர்களை கைது பண்ணி மிரட்டி வைப்பதும் இதனால்தான்.
சில பின்னூட்டங்களைப் பாருங்கள்.
Suresh
எல்லாம் சொந்த சுய நல லாப காரண காரியங்களுக்கு மதம் மாற வேண்டியது மாறி விட்டு எதாவது புளுக வேண்டியது "எனக்கு இவர் வந்தார் அவர் வந்தார் அது தந்தார் இது தந்தார் " என . இந்த காரணங்களை ஒப்பு கொண்டு வரவேற்கும் ஒரு கும்பல் எப்போதும் உடனே ஒரு கும்மாளம் இடும்
kumaresan
இவரு சீக்கிரமே ஒரு அரபு பொண்ண கல்யாணம் பண்ணிப்பாரு. அதுக்கான முன்னோட்டம் தான் இதெல்லாம்..எந்த ஒரு விசயத்த பண்ணும் போது பிளான் பண்ணி பண்ணனும்....
Chinnappan
கதை நன்றாகத்தான் இருக்கிறது; ஆனால் நம்பும்படிதான் இல்லை!
Lakshmanakumar
மதம் மாறினால் AR Rahman' i போல வரலாம் என்று நினைப்பு. மியூசிக்ஐ காபி அடிப்பதை போல. ரஹ்மான் இரவில் விழித்து மியூசிக் போடுவதை பார்த்து சில மியூசிக் டைரக்டர்கள் இரவில் மியூசிக் போட்டனர். Dont believe this.
PRABAKARA,
யுவன் பேட்டியில் தெரிவது அவருடைய பெற்றோர் அவருக்கு முழு சுதந்திரம் கொடுத்தது. ஆனால் அவர் என்றாவது கோவிலுக்கு போனாரா? இந்து மதம் பற்றி அவரு தெரியாதை காட்டுகிறது. இசை அறிவிற்கும் சுய வாழ்க்கைக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம். கர்நாடக சங்கீதம் தெரிந்தவர்க்கு இந்து மதம் பற்றி தெரியாதது கேள்வி குறி தான்.
இதை விட ஆபாசமாகவும் கோபமாகவும் 250க்கு மேற்பட்ட பின்னூட்டங்கள். கண்ணியம் கருதி அதனை வெளியிடவில்லை.
இவ்வளவு கூப்பாடு போடும் இந்த பார்பனர்கள் தங்கள் மதத்தில் உள்ள தீண்டாமையை போக்க முயற்சிப்பதுதானே. ஸ்ரீரங்கம் கோவிலின் கர்ப்ப கிரஹத்தினுள் சென்று வழிபட இவர் தந்தை இளையராஜாவை அனுமதிக்கவில்லை. தலித் என்பதால் வெளியாக்கி விட்டனர். ஆகம விதிகள் என்று தனக்கு சமாதானம் கூறிக் கொண்டு இதனை சாதாரணமாக இளையராஜா எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இந்த கால இளைஞரான யுவனை இந்த செயல் எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும்? உலகம் போற்றும் ஒரு இசைக் கலைஞனான தனது தந்தைக்கே இந்த இழிவு என்றால் தான் எம்மாத்திரம் என்ற கோபம் உள்ளுக்குள் வராதா?
நாளை யுவன் மெக்காவுக்கு வரட்டும். அவரை முதல் வரிகையில் நிற்க வைத்து நாங்கள் அழகு பார்போம். சமத்துவம் எங்கு கிடைக்கிறதோ அதனை நோக்கி ஓடுவதை தடுக்க நீங்கள் யார்? அல்லது அவருக்கு ஒரு மாற்று வழியைக் கூறுங்கள்.
"ஆகம விதிகளின் படி கோவில் வழிபாடுகள் சமசுகிருததில்தான் செய்யப்படவேண்டும். தமிழை உபயோகித்தால் கோவிலின் புனிதம் அகன்றுவிடும். அகன்ற புனிதத்தை மீண்டும் கோவிலில் ஏற்படுத்த சமசுகிருதத்தில் சுத்திகரிப்பு சடங்குகளை செய்யவேண்டும்!" (use of Tamil profaned the sancttity of the temples.. To restore the sanctity purification ceremonies need to be performed) .
- ஜி.பாலசுப்ரமனிய ஐயர்
உச்ச நீதி மனறத்தில் இது குறித்து வழக்கேற்பட்டு நிலுவையில் உள்ளது,.
சமஸ்கிரதத்தை தேவ மொழியாகவும், தமிழை நீச மொழியாகவும் அதுவும் தமிழகத்திலேயே கூறிக் கொண்டு அதற்கு ஆதரவாக தடையாணையையும் பெற்று வைத்துள்ள பார்பனர்கள் இதற்கு பதில் சொல்வார்களா? தாய் மொழியான தமிழை இந்த அளவு வெறுக்கும் ஒரு மதத்தில் தமிழனான யுவன் தொடர வேண்டும் என்று எதன் அடிப்படையில் எதிர்பார்க்கிறீர்கள்? பார்பனர்களாகிய உங்களோடு தனது வாழ்நாள் முழுக்க போராடிய பெரியார் முடிவில் சோர்வடைந்து 'இன இழிவு நீங்க இஸ்லாமே சிறந்த மருந்து' என்று கூறி விட்டு செல்லவில்லையா?
இனி பெரியார் பேசுவதை கேளுங்கள்......
“ஆதி திராவிடர்களை நான் ‘இஸ்லாம் கொள்கைகையத் தழுவுங்கள்’ என்று சொன்னதற்காக அநேகம் பேர் என் மீது கோபித்துக் கொண்டார்கள். அவர்களைப் பற்றி நான் கோபித்துக் கொள்ளவில்லை. அவர்களுக்குச் சொந்த அறிவு மில்லை. சொல்வதையும் கிரகிக்க சக்தியுமில்லை. சிலருக்குத் தங்கள் மேன்மை போய்விடுமே, தங்களுக்கு அடிமைகள் இல்லாமல் போய்விடுமே என்கின்ற சுயநல எண்ணம் என்றே நான் கருதி விட்டேன். ஏனெனில், ‘மோட்சம் அடைவதற்காக’ நான் ஆதி திராவிடர்களை இஸ்லாம் கொள்கைகளைத் தழுவுங்கள் என்று சொல்ல வில்லை. அல்லது ‘ஆத்மார்த்தத்திற்கோ’ ‘கடவுளை அறிவதற்கோ’ நான் அப்படிச் சொல்லவில்லை. ஆதி திராவிடர்களின் தீண்டாமையைப் போக்குவதற்கு சட்டம் செய்வது, சத்தியாக்கிரஹம் செய்வது முதலியவை போலவே இஸ்லாம் கொள்கையைத் தழுவுவது என்பதும் ஒரு வழி என்றே சொன்னேன். இனியும் சொல்லுகின்றேன்.
சட்டம் செய்வது கஷ்டம்; செய்தாலும் அமுலில் வருவதும் கஷ்டம். சத்தியாக்கிரஹம் செய்வதும் கஷ்டம். செய்தாலும் வெற்றிப் பெறுவதும் சந்தேகம். இவற்றால் துன்பமும், தோல்வியும் கிடைத்தாலும் கிடைக்கலாம். ஆனால், ஆதி திராவிடர்களுக்கு இஸ்லாம் கொள்கையை ஏற்றுக் கொண்டேன் என்று சொல்வதில் என்ன கஷ்டம்? அதில் தோல்வியோ துன்பமோ ஏதாவது உண்டா? அல்லது அன்னியருக்கு ஏதாவது கஷ்டம் உண்டா? அவன் ஆஸ்தீகனாய் இருந்தால் என்ன? நாஸ்தீகனாய் இருந்தால் என்ன? உண்மை இஸ்லாம் ஆனால் என்ன? பொய் இஸ்லாம் ஆனாலென்ன? யாருக்கும் எவ்வித கஷ்டமும் இல்லாமல், வேண்டுமானால் எந்தவித மன மாறுதல்கூட இல்லாமல் தன்னுடைய இழிவையும் கஷ்டத்தையும் விலக்கிக் கொள்ள ஆசையும் அவசரமும்பட்ட ஒரு மனிதன் தான் மாலை 5 மணிக்கு இஸ்லாம் கொள்கையை ஏற்றுக் கொண்டதாய்ச் சொல்லி 5.30 மணிக்கு ‘தீண்டாதவன்’ என்கின்ற இழிவிலிருந்து மீண்டு தெருவில் நடக்க உரிமை பெற்று மனிதனாவதில் ஏன் மற்றவர்கள் ஆட்சேபிக்க வேண்டும்? என்பது எனக்கு விளங்கவில்லை.
கேவலம் வயிற்றுச் சோற்றுக்காக 100க்கு 90 மக்கள் என்னென்னமோ அவரவர்களாலேயே இழிவான குற்றமான காரியம் என்று சொல்லப்படுவதை எல்லாம் செய்கின்றார்கள். அப்படி இருக்க இதில் என்ன இழிவோ குற்றமோ இருக்கின்றது என்று கேட்கின்றோம். உலகில் மதங்கள் அடியோடு ஒழிக்கப்படும் போது இஸ்லாம் மதமும் ஒழியும். அதுபோது இந்த ஆதி திராவிடர்கள் ஏற்றுக் கொண்டதும் ஒழிந்து போகுமே தவிர அது மாத்திரம் நிலைத்து விடாது. அதற்காக அதிகக் கஷ்டமும் இல்லை. ஆகையால், எது எப்படி யானாலும் தீண்டாமை ஒழிய வேண்டுமென்றும் தீண்டாதார் எனப்படுபவர்கள் இஸ்லாம் கொள்கையைத் தழுவ வேண்டியது என்பது ஒரு வழியேயாகும்.
ஏன் கிறிஸ்து மதத்தைத் தழுவக் கூடாது? ஆரிய சமாஜத்தைத் தழுவக் கூடாது? என்று கேட்கலாம். கிறிஸ்துமதக் கொள்கைகள் புஸ்தகத்தில் எப்படியிருக்கின்றது என்பது பற்றி நான் சொல்ல வரவில்லை. பிரத்தியட்சத்தில் பறக் கிறிஸ்துவன், பார்ப்பாரக் கிறிஸ்துவன், வேளாளக் கிறிஸ்துவன், நாயுடு கிறிஸ்துவன், கைக்கோளக் கிறிஸ்துவன், நாடார் கிறிஸ்துவன் என்பதாகத் தமிழ்நாடு முழுவதும் இருப்பதைப் பார்த்து வருகின்றேன்.
இஸ்லாம் மார்க்கத்தில் பாப்பார முஸ்லீம், பற முஸ்லீம், நாயுடு முஸ்லீம், நாடார் முஸ்லீம் என இருக்கின்றதா? என்று கேட்கிறேன். இங்குள்ள கிறிஸ்துவ சகோதரர்கள் கோவித்துக் கெள்ளக்கூடாது. வேண்டுமானால் வெட்கப் படுங்கள் என்று வணக்கமாக தெரிவித்துக் கொள்கிறேன். ஆரிய சமாஜம் என்பதும் ஒரு வேஷமே தான். அதுவும் பயன் அளிக்கவில்லை.
உதாரணமாக வைக்கம் சத்தியாக்கிரகத்தில் ஆரிய சமாஜத் தீயர்களையும், கிறிஸ்தவப் புலையர்களையும் தெருவில் நடக்கவிடவில்லை. இஸ்லாமானவன் தாராளமாய் விடப்பட்டான். பாலக்காட்டிலும் அப்படியே நடந்தது. ஒரு நாள் பாலக்காட்டில் ஒரு செர்மன் என்கிற இழிவு படுத்தப்பட்ட ஜாதியிலிருந்த தீண்டாதவன் ஒருவன் இஸ்லாமாகி தடுக்கப்பட்டத் தெரு வழியாகப் போனான். அப்போது அவனை ஜவுளிக் கடைப் பார்ப்பனரும் வெற்றிலைக் கடை நாயரும் தெருவுக்கு வந்த நின்று பார்த்தார்கள். உடனே அங்கு இங்கிருந்த ஒரு மாப்பிள்ளை (இஸ்லா மானவன்) “எந்தடா? பன்னிக் கூத்தச்சி மகனே! அவனைப் பார்க்கிறாய்” என்று கேட்டான். செர்மனாயிருந்த இஸ்லாமியன் சிரித்துக் கொண்டே போனான். பார்ப்பனனும் நாயரும் தலைகுனிந்து கொண்டார்கள். இது பிரத்தியட்சத்தில் நடந்த சம்பவம் - சந்தேகமில்லாமல் இனியும் நடக்கக் கூடிய சம்பவம்.
(சாத்தான்குளத்தில் 28.7.1931 அன்று தந்தை பெரியார் ஆற்றிய உரை. ‘குடி அரசு'
ஆம்.... இனியும் நடக்கக் கூடியது என்று அன்று பெரியார் சொன்னார். அது உண்மைதான் என்று இன்று யுவன் இஸ்லாத்தை ஏற்று அவரது வார்த்தையை மெய்ப்படுத்தியுள்ளார்.
Thanks :சுவனப் பிரியன்
Category: சமுதாய செய்தி



0 comments