.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

சுதந்திரதின விழாவில் ரூ.1½ கோடியில் நலத்திட்ட உதவிகள் பெரம்பலூர் கலெக்டர் வழங்கினார்!

Unknown | 2:04 PM | 0 comments

.
பெரம்பலூரில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடந்த சுதந்திர தினவிழாவில் கலெக்டர் தேசிய கொடியை ஏற்றி வைத்து 283 பேருக்கு ரூ. 1 கோடியே 44 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

சுதந்திரதின விழா


பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் 68-வது சுதந்திரதினவிழா நடந்தது. மாவட்ட கலெக்டர் தரேஸ்அஹமது தேசிய கொடியை ஏற்றிவைத்து போலீசார், தீஅணைப்பு மற்றும் மீட்புத்துறையினர், ஊர்க்காவல்படைவீரர்கள் என்.சி.சி. என்.எஸ்.எஸ். சாரணர் இயக்கம், ஜூனியர் ரெட்கிராஸ் இயக்க மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

பாராட்டு சான்றிதழ்கள்


இதனைத்தொடர்ந்து சமாதான வெண்புறாக் களையும், தேசிய ஒருமைப் பாட்டை விளக்கும் வகையில் மூன்று வண்ண பலூன் களையும் பறக்கவிட்டு, சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களது வாரிசுகள் 25 பேருக்கு பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார். காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக 27 பேர், ஊர்காவல் படையைச் சேர்ந்த 10பேர், தீயணைப்புத் துறையைச் சேர்ந்த 11 பேர், சிறப்பாக பணிபுரிந்த அரசு அலுவலர்கள் 250 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

இதில் உழவர் பாதுகாப்பு திட்டம், முன்னாள் படைவீரர் வாரிசுகளுக்கு பரிசுத்¢தொகை வழங்கும் திட்டம், இயற்கை மரண உதவித்தொகை வழங் கும் திட்டம், பிற்பட்டோர், ஆதிதிராவிடர்¢, மாற்றுத் திறனாளிகள் நலத்துறைகள், கூட்டுறவுத்துறை, வேளாண் மைத்துறை தோட்டக்கலைத் துறை, கால்நடை பராமரிப் புத்துறை மற்றும் நலிவடைந்த கலைஞர்களுக்கு நிதிஉதவி வழங்கும்திட்டம், புதுவாழ்வு திட்டம், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு நேரடிகடன் வழங்கும் திட்டம், உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் வாயிலாக 283 பேருக்கு ஒரு கோடியே 44 லட்சத்து 77 ஆயிரத்து 563 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கப்பட்டன.

இதில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகள், மாவட்ட அரசு இசைப்பள்ளி, அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 1,000 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள், மாற்றுத் திறனாளி சிறுவர்-சிறுமியர் பங்கேற்ற கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சோனல்சந்திரா, மாவட்ட வருவாய் அலுவலர் வி.ராஜன்துரை, உதவிஆட்சியர் ப.மதுசூதன் ரெட்டி, ஐ.எப்.எஸ். பயிற்சி அலுவலர் பி.அஸ்வின். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அய்யம்பெருமாள், நகராட்சித் தலைவர்சி.ரமேஷ், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள் ஜெயக்குமார், ந.கிருஷ்ண குமார், ரா.வெண்ணிலா, க.ஜெய லட்சுமி, மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1