குழந்தைகளின் இயல்பான வளர்ச்சி தடைபடுவதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து முறையான சிகிச்சை அளிக்க வேண்டும் பெரம்பலூர் கலெக்டர் பேச்சு!
குழந்தைகளின் இயல்பான வளர்ச்சி தடைபடுவதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து முறையான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று பெரம்பலூர் மாவட்ட கலெக்டர்தரேஸ் அஹமது பேசினார்.
அங்கன்வாடி பணியாளர்கள்
பெரம்பலு£ர் மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் மூலமாக 7 ஆயிரத்து 434 கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள், 11,165 குழந்தைகளின் முன்பருவக் கல்வி, 43,189 குழந்தைகளின் வளர்ச்சி ஆகியவை கண்காணிக்கப் பட்டும் வருகின்றது.
இதன் மூலமாக கடுமையான ஊட்டச்சத்துப் பற்றாக் குறை யுள்ள குழந்தைகள் மற்றும் நோய்வாய்ப்பட்ட குழந்தை கள் கண்டறியப்பட்டு உரிய மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்படு கின்றனர். இப் பணியினை மேற்கொள் ளும் அங்கன்வாடிப் பணியாளர்க ளுக்கு “இயலாமையை ஆரம்ப நிலையில் கண்டறிதல் குறித்து பயிற்சி” அளிக்கும் பொருட்டு ஒருங்கி ணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத் தின் மூலம் பெரம் பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் பணியாற்றும் குழந்தை வளர்ச் சித் திட்ட அலுவலர் களுக்கும் மேற்பார்வை யாளர் களுக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது. இது போன்ற பயிற்சி பெரம் பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் நடைபெற்றது.
இப்பயிற்சி முகாமில் மாவட்ட கலெக்டர் தரேஸ் அஹமது கலந்து கொண்டு பேசியதாவது:
குழந்தைகளின் இயல்பான வளர்ச்சி
பெற்றோர் தங்களின் குழந்தைகளின் இயல்பான வளர்ச்சி தடைபடும்போது அதனை உடனடியாக தெரிந்து கொள்ளாமல் காலதாமதம் செய்வதால் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப் படு கின்றது. எனவே, குழந்தை வளர்ச்சித் திட்டத்தில் பணியாற்றும் குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர்களும், மேற் பார்வையாளர்களும், தங்கள் பகுதியில் உள்ள குழந்தைகளின் பல்வேறு நிலை வளர்ச்சிகளில் முழுமையடையாத நிலை தென்பட்டால், உடனடியாக பெற்றோருக்கு அதனால் ஏற்ப டும் பாதிப்பு குறித்து தெரி வித்து, அக்குழந்தைகளை பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பகல்நேர பராமரிப்பு மையங்களில் சேர்த்து, அவர்களுக்கு முறை யான பயிற்சி அளிப்பதன் மூலமாக, சாதாரண குழந்தை களுடன் பள்ளிகளில் பயில வைக்க இயலும்.
இயலாத குழந்தைகள்
மேலும் இக்குழந்தைகளுக்கு மேற்கொள்ள வேண்டிய சிகிச்சைகள், பார்வைக் குறைபாடு, செவித்திறன் குறை பாடு, பேச்சுத்திறன் குறைபாடுகளைக் கண்டறிந்து குறித்த வயதில் அவர்களுக்கு தகுந்த சிகிச்சை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்திற்கு தெரி யப்படுத்தினால், சரியான நேரத்தில் சிகிச்சை மேற் கொள்ளப்பட்டு இயல்பு நிலைக்கு கொண்டு வர முடியும். எனவே பயிற்சி பெற வந்துள்ள நீங்கள் அனைவரும், அங்கன்வாடி பணியாளர் களுக்கு தகுந்த பயிற்சி வழங்கி, அவர்களை அர்ப்பணிப்பு உணர்வுடன் தங்கள் பகுதி இயலாத குழந்தைகள் குறித்து கண்டறிந்து பயன் பெறச் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Category: மாவட்ட செய்தி
0 comments