பெரம்பலூர் அருகே மரத்தில் கார் மோதி 3 பேர் சாவு!(புகைப்படம் இணைப்பு)
பெரம்பலூர் அருகே சனிக்கிழமை மாலை சாலையோர மரத்தில் கார் மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர்.
மணப்பாறையிலிருந்து வேலூருக்குச் சென்ற காரில், வேலூரைச் சேர்ந்த சு. பாண்டுரங்கன் (60), அவரது மகளான கிருஷ்ணமூர்த்தி மனைவி அமுதவள்ளி (35), பாண்டுரங்கனின் நண்பர் குப்புசாமி (52) ஆகியோர் இருந்தனர். காரை, திருச்சியைச் சேர்ந்த க. விஜய் (33) ஓட்டினார்.
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பாடாலூர் அருகே உள்ள பெருமாள் பாளையம் பிரிவுச் சாலை அருகே சென்றபோது, காரின் முன்பக்க டயர் வெடித்து சாலையோர மரத்தில் கார் மோதியது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பாண்டுரெங்கனும், குப்புசாமியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவலறிந்த பாடாலூர் போலீஸார் விபத்தில் சிக்கிய அமுதவள்ளி, ஓட்டுநர் க. விஜய் ஆகியோரை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அமுதவள்ளி உயிரிழந்தார். ஓட்டுநருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தகவலறிந்த பெரம்பலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சோனல் சந்த்ரா சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். புகாரின்பேரில், பாடாலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
Thanks : vasanth jeeva.
Category: மாவட்ட செய்தி
0 comments