தேசிய அளவிலான ஈட்டி எறிதல் போட்டியில் பெரம்பலூர் வீரர் தங்கம் வென்று சாதனை!
![]() |
பிரகாஷ். |
பெரம்பலூர், ஆக 2:
தேசிய அளவிலான ஈட்டி எறிதல் போட்டியில் பெரம்பலூர் வீரர் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
அகிலஇந்திய அளவில் மாநில மின்வாரியங்களுக்கு இடையேயான தடகள விளையாட்டுப் போட்டிகள் அரியானா மாநிலத்திலுள்ள குருஷேத்திரா என்ற இடத்தில் நடைபெற்றது. இதில் இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களில் இருந்தும் மின் வாரியப்பணியாளர்கள் பங்கேற்றனர். இதில் திருச்சி மண்டலம், பெரம்பலூர் மின்பகிர்மான வட்டத்தைச் சேர்ந்த களஉதவியாளரான பிரகாஷ் என்பவர் ஈட்டி எறிதல் போட் டியில் கலந்து கொண்டார்.
போட்டியில் பிரகாஷ் 49மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து அகிலஇந்திய அளவில் முதலிடத்தைப் பெற்று தங்கம் வென்று அபாரசாதனை படைத்துள்ளார். தங்கம்வென்று சாதனை படைத்துள்ள பிரகாஷிற்கு பெரம்பலூர் மின்பகிர்மான வட்டத்தின் மேற்பார்வைப் பொறியாளர் வளர்மதி தலைமையில் பாராட்டுவிழா 4 ரோடு பகுதியிலுள்ள அலுவலகத்தில் நடந்தது. இதில் பிரகாஷைப் பாராட்டிய மேற்பார்வைப் பொறியாளர் வளர்மதி, மேலும் பல வெற்றிகளை குவித்திட வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியில் மின்வாரிய விளையாட்டுப் பிரிவுக்கான வட்டப் பொறுப்பாளர் இளங்கோவன், பொறியாளர் அரசு மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு பிரகாஷை வாழ்த்தினர்.
பெரம்பலூர் மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகத்தில் களஉதவியாளராகப் பணிபுரிந்துவரும் பிரகாஷின் சொந்தஊர் பெரம்பலூர் அருகேயுள்ள கோனேரிப்பாளையம். இவரது அப்பா ரெங்கராஜ் என்பவர் பெரம்பலூர் டவுன் மின்வாரியத்தில் மஸ்தூராக பணிபுரிந்து பணியின்போது இறந்துபோனதால், கருணை அடிப்படையில் மின்வாரியத்தில் களஉதவியாளர்பணி பிரகாஷிற்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Category: மாணவர் பகுதி
0 comments