.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் பரபரப்பு! குடிநீர் வசதி கேட்டு கலெக்டரை நோயாளிகள் திடீர் முற்றுகை!

Unknown | 9:24 PM | 0 comments



பெரம்பலூர், ஆக. 26:
குடிநீர் வசதி கேட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் கலெக்டரை நேற்று நோயாளிகள் முற்றுகையிட்டனர்.
பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, துறையூர் சாலை யில் உள்ளது. இங்கு 200 க்கும் மேற்பட்ட உள் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனையில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. நோயாளிகளும், அவர்களு டன் இருக்கும் உறவினர்களும் வெளியில் சென்று தனியாருக்கு சொந்தமான குடிநீர் குழாயில் தண்ணீர் பிடித்து வருகின்றனர். சிலர் கடைகளில் காசு கொடுத்து பாட்டில் வாங்கிக்கொள்கின்றனர்.
இந்நிலையில் கலெக்டர் தரேஸ் அகமது நேற்று அரசு மருத்துவமனைக்கு வந்தார். அவர் இடுப்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண்ணை பார்த்து விட்டு காரில் கிளம்பினார்.
அப் போது 25க்கும் மேற்பட்ட நோயாளிகள் மற்றும் உறவினர்கள் கலெக் டர் காரை சூழ்ந்து கொண்டு குடிநீர் வசதி செய்து தர கோரிக்கை விடுத்தனர். அப்போது கலெக்டர் பதில் கூறும் முன்பே, நோயாளிகளைத்தடுத்த கண்காணிப்பாளர் மனோகரன், இதெல்லாம் குறைதீர்க்கும்நாள் கூட்டத்திற்குசென்று கூறுங்கள், இங்கேகூறக்கூடாது என கூறினார். இதனால் நோயாளிகள் புலம்பியபடியே மீண்டும் வார்டுகளுக்கு சென்றனர். கலெக்டரும் பதில் கூறாமல் புறப்பட்டு சென்று விட்டார்.
அதேபோல் நர்சும் தங்கும் விடுதியில் சில வாரங்களுக்கு முன் புகுந்த கொள்ளையன் ஒருவன், நர்சிடம் நகை பறிக்க முயன் றான். எனவே பாதுகாப்பு வசதி கேட்டு கலெக்டரி டம் முறையிட நர்சுகள் காத்திருந்தனர். அவர்களி டம் மருத்துவமனை கண்காணிப்பாளர் மனோகரன், மருத்துவமனையை விட்டு வெளியே சென்று கலெக் டரை சந்தியுங்கள் என்றார். இதையடுத்து நர்சுகள் மருத்துவமனைக்கு வெளியில் காத்திருந்தார். ஆனால் அவர்களை சந்திக்காமல் கலெக்டர் சென்று விட்டார்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1