.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

பெரம்பலூரில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் 659 மனுக்கள் குவிந்தன!

Unknown | 10:15 PM | 0 comments

பெரம்பலூர்,ஆக,26:
பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும்நாள் முகாமில் 659 பேர் கலெக்டரிடம் மனுக்கள் கொடுத்தனர்.
பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில் நேற்று கலெக்டர் தரேஸ்அஹமது தலைமையில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டாமாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனைப்பட்டா உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 659 பேர் கலெக்டர் தரேஸ் அஹமதுவிடம் மனுக்களை நேரில் கொடுத்தனர்.
பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்டக் கலெக்டர், மனுக்களை சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் கொடுத்து, குறித்த காலத்திற்குள் மனுக்களின்மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
மேலும், தகுதியான அனைவருக்கும் அரசின் நலத்திட்டங்கள் விரை வாக சென்றடையுமாறு பணியாற்ற வேண்டும் என்று அரசுத்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இராஜன்துரை, சமூகப் பாதுகாப்புத்திட்ட துணைகலெக்டர் முருகேஸ்வரி, உதவிதிட்ட அலுவலர் குமரன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலரும் கலந்து கொண் டனர்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1