வி.களத்தூர் அருகே அனுமதி பெறாத குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு!
பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் அடுத்துள்ள கை.களத்தூர் ஊராட்சியில் பலர் அனுமதி பெறாமல் குடிதண்ணீர் இணைப்பு பெற்றுள்ளதாக ஊராட்சி மன்ற தலைவர் அழகுவேலுக்கு புகார் வந்தது. இதைத்தொடர்ந்து அவரும், வட்டார வளர்ச்சி அதிகாரி பாரதிதாசன், துணை வட்டார வளர்ச்சி அதிகாரி வெங்கடேஷ்வரன், கை.களத்தூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் காமராஜ் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் ஊராட்சியில் அனுமதி பெறாமல் குடிநீர் இணைப்பு எடுத்துள்ளது பற்றி ஆய்வு செய்தனர். அப்போது சிறுநிலா கிராமத்தில் அனுமதி பெறாமல் குடிநீர் இணைப்பு எடுத்த 10–க்கும் மேற்பட்டோரது இணைப்பை துண்டித்தனர். மேலும் தொடர்ந்து கை.களத்தூர், பாதாங்கி, பெருநிலா ஆகிய கிராமங்களில் தீவிரமாக ஆய்வு செய்து அனுமதி பெறாதவர்களின் இணைப்பு துண்டிக்கப்படும் என ஊராட்சி மன்றத்தலைவர் அழகுவேல் தெரிவித்தார்.
Category: மாவட்ட செய்தி

0 comments