பெரம்பலூரில் மோட்டார் சைக்கிள் மோதி சிறுமி சாவு
![]() |
| File. |
பெரம்பலூரில் மோட்டார் சைக்கிள் மோதி 4 வயது சிறுமி ஞாயிற்றுக்கிழமை மாலை இறந்தார்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள கிருஷ்ணாபுரம்கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார் மகள் லட்சியா (4). இவர், பெரம்பலூர் கடைவீதியில் உள்ள ஜவுளிக்கடை அருகே பெற்றோருடன் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியே சென்ற அடையாளம் தெரியாத மோட்டார் சைக்கிள் மோதிய பலத்த காயமடைந்த லட்சியா, பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
Category: மாவட்ட செய்தி


0 comments