.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

திருச்சியில் பரிதாபம் காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் சாவு உடல்களை மீட்க தீயணைப்பு படையினர் தீவிரம்!

Unknown | 9:01 PM | 0 comments



காவிரி ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் தண்ணீரில் மூழ்கி விட்டார்கள் அவர்கள் ஆழமான இடத்தில் மணலில் சிக்கி இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

மேட்டூர் அணை திறப்பு

கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவ மழை பெய்து வருவதால் அங்குள்ள அணைகள் நிரம்பி உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது, இதனால் மேட்டூர் அணை 100 அடியை தாண்டியது.

இந்த நிலையில் கடந்த 10ந் தேதி முதல் அமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அந்த தண்ணீர் திருச்சி மாவட்டம் முக்கொம்பு வந்து சேர்ந்தது. பின்னர் அங்கிருந்து 3 நாட்களுக்கு முன்பு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகமாக இருக்கிறது.

நேற்று முன்தினம் இரவு முதல் திருச்சி பகுதியில் காவிரி ஆற்றில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது,

இந்த நிலையில் திருச்சி அரியமங்கலம் காட்டூர் வேணுகோபால் நகரை சேர்ந்த கணேசனின் மகன் தீபக் ( வயது 18) திருச்சியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் படித்து வருகிறார்.

தீபக்கின் நண்பர்கள் சாவித் (19), சேக் (17) முகம்மது பாசில் ( 170 இவர்கள் 3 பேரும் காட்டூர் பகுதியை சேர்ந்தவர்கள்.

சுதந்திர தினமான நேற்று தீபக்கும் அவருடைய நண்பர்கள் 3 பேரும் காவிரி ஆற்றில் ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் பகுதி கீதாநகர் அருகில் உள்ள புஷ்பக் நகர் படித்துறையில் ஆனந்தமாக குளித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் குளித்த இடம் ஆழமான பகுதி. மேலும் நீரின் வேகம் அதிகமாக உள்ள இடமாகும். அந்த இடத்தில் அவர்கள் குளித்துக் கொண்டிருந்தபோது திடீர் என்று தீபக்கை காணவில்லை.

அவருடைய நண்பர்கள் தண்ணீருக்குள் மூழ்கி தேடியும் தீபக்கை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுபற்றி உடனடியாக ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. நிலைய அதிகாரி மெல்கியூ ராஜா தலைமையில் தீயணைப்பு படையினர் மிதவைகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தார்கள்.

தீயணைப்பு படையினர் ஆற்றில் மிதவையில் சென்று தீபக்கை தேடினார்கள். நேற்று பகல் 12 மணியில் இருந்து தேடி வருகிறார்கள். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை,

இதனால் தீபக்கின் கதி என்ன என்று தெரியவில்லை, அவர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டாரா அல்லது ஆழமான பகுதியில் நீர் சுழற்சியில் சிக்கி இறந்து விட்டாரா என்று தெரியவில்லை.

தீபக்கை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேலும் ஒருவர் கதி என்ன?

ராஜஸ்தான்,முரேனா மாநிலத்தை சேர்ந்தவர்கள் மகாவீர் (27), தாசூ (19) பன்னே (28), சத்தாம் ( 27) ஆசிக் (24) இவர்கள் 5 பேர்களும் மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஜமால்கான் என்பவரிடம் வேலை செய்பவர்கள். ஜமால்கான் உத்தரவின்பேரில் மகாவீர் உள்பட 5 பேர்களும் திருச்சியில் கட்டிட மொசைக் போடும் வேலை செய்துவந்தார்கள். திருச்சி மிளகுபாறை பகுதி பொன்னகர் 10–வது கிராசில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி இருந்தனர்.

நேற்று சுதந்திரதின விழா என்பதால் அவர்கள் 5 பேர்களும் ஸ்ரீரங்கம் பகுதி கீதா நகர் தடுப்பணையில் குளிக்க சென்றார்கள், தடுப்பணையில் அவர்கள் ஆழமான பகுதியில் சென்று அணையில் உயரமான,இடத்தில் இருந்து டைவ் அடித்து குளித்துக் கொண்டிருந்தார்கள், அப்போது திடீர் என்று ஆசிக்கை காணாமல் அவர்கள் திடுக்கிட்டார்கள், அந்த பகுதியில் தண்ணீருக்குள் அவர்கள் ஆசிக்கை தேடினார்கள். ஆனால் ஆசிக்கை கண்டுபிடிக்க முடியவில்லை. ஏற்கனவே தீபக்கை தேடிக்கொண்டிருந்த போலீசாருக்கு இது மேலும் அதிர்ச்சியாகி சம்பவஇடத்திற்கு விரைந்தனர்.

அவர்கள் மிதவை கொண்டு ஆசிக்கை தேடி வருகிறார்கள்.

தொடர்ந்து ஆசிக்கையும் தேடும் பணி தொடங்கப்பட்டது. அவரும் காவிரி ஆற்றில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1