.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

அக்டோபரில் தேர்வெழுதும் +2 மாணவர்கள் ஆன்லைனில் பதியலாம்!

Unknown | 1:28 PM | 0 comments




செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் +2 தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் வரும் 14ம் தேதி வரை நேரடியாக சென்று கீழ்கண்ட மையங்களில் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம் என்று தஞ்சை கல்வி மாவட்ட அலுவலர் ரெங்கநாதன் தெரிவித்துள்ளார்.


மாணவர்கள் மட்டும் தஞ்சை மேம்பாலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், மாணவிகள் மட்டும் தஞ்சை தூய இருதய மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும், மாணவ, மாணவிகள் திருவையாறு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும் தங்களது விண்ணப்பங்களை வரும் 14ம் தேதி மாலை 5 மணி வரை ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.



பெரம்பலூர் மாவட்டம்!


பெரம்பலூர் மாவட் டத்தில் பிளஸ்–2 துணைத்தேர்வு எழுத இருக்கும் தேர்வர் களிடமிருந்து விண் ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றது என முதன் மைக்கல்வி அலுவலர் கனகசபாபதி தெரிவித் துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளதாவது:–
விண்ணப்பிக்க தகுதியானவர்கள்
இத்துறையால் நடத்தப் பட்ட மேல்நிலை தேர் வெழுதியோர், தேர்ச்சி பெறாத பாடங்களில் மீண்டும் தேர்வெழுத விண்ணப்பிக் கலாம்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்று இரண்டு ஆண்டு இடைவெளியும் 01.09.2014 அன்று 16 வயதும் பூர்த்தி அடைந்தவர்கள் ’’நேரடித் தனித்தேர்வர்களாக’’ விண் ணப்பிக்கலாம் விண்ணப்பங் களை ஆன்–லைனில் பதிவு செய்வதற்கு ஆண் தனித் தேர்வர்களுக்கு பெரம்பலு£ர் அரசு மேல் நிலைப்பள்ளியிலும், பெண் தனித்தேர்வர்களுக்கு புனித தோமினிக் மேல்நிலைப் பள்ளியிலும் பெரம்பலு£ர் தனித்தனியே சிறப்பு மையங் கள் அமைக்கப்பட்டுள்ளன. தனித்தேர்வர்கள் இம்மையங் களுக்கு நேரில் சென்று தங்களது விண்ணப் பங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். சிறப்பு மையங் களில் 14–ந் தேதிக்குள் (வியா ழக்கிழமை) தங்களின் விண்ணப்பத்தினை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
மறுமுறை தேர்வு எழுதுவோர்
மறுமுறை தேர்வெழுதுவோர் ஓவ்வொரு பாடத்திற்கும் ரூ.50 வீதம் தேர்வுக்கட்ட ணமும், அதனுடன் இதரக் கட்டணமாக ரூ.35–ம் செலுத்த வேண்டும். ஆன்– லைன் பதிவுக்கட்டணம் ரூ.50, நேரடித்தனித்தேர்வர்கள் தேர்வுக்கட்டணம் ரூ.150, இதரக்கட்டணம் ரூ.35 கேட் டல் மற்றும் பேசுதல் திறன் தேர்வு ரூ.2 என மொத்தம் ரூ.187 ஆன்–லைன் பதிவுக் கட்டணம் ரூ.50 தேர்வுக் கட்டணம் மற்றும் ஆன்–லைன் பதிவுக் கட்டணத்தினை பண மாக செலுத்த வேண்டும்.
பார்வையற்றோர்
பார்வையற்றோருக்கு மேற் குறிப்பிட்ட கட்டணம் செலுத் துவதிலிருந்து விலக்களிக் கப்பட்டுள்ளது. விண்ணப்ப எண்ணின் முக்கியத்துவம் ஆன்–லைனில் விண்ணப் பத்தினைப் பதிவு செய்த பிறகு, தனித்தேர்வர்களுக்கு ஒப்பு கைச்சீட்டு வழங்கப்படும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்ப எண்ணை பயன் படுத்தியே அரசுத்தேர்வுத் துறை பின்னர் அறிவிக்கும் நாளில் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்ய இயலும் என்பதால், ஒப்புகைச்சீட்டினை தனித் தேர்வர்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். விண்ணப்பதாரர் உரிய தேர்வுக் கட்டணம் மற்றும் ஆன்–லைன் பதிவுக்கட்ட ணத்தினை சிறப்பு மையங் களில் பணமாகச் செலுத்த வேண்டும். மதிப்பெண் சான்றிதழ் ஒளிநகல் (இதுவரை எழுதிய மேல்நிலைத்தேர்வு களுக்கானது பள்ளித் தலைமை ஆசிரியரிடம் பெற்ற தகுதிச்சான்றிதழ் (பள்ளி மாணவராக பதிவு செய்யப் பட்டு தேர் வெழுதாதவர்களுக்கு மட்டும்). செய்முறை மதிப் பெண்களுக்கான ஆவணம் (செய்முறை அடங்கிய பாடங் களைத் தேர்வெழுது வோர் மட்டும்) எச்பி ’வகை யினர் உரிய தேர்வுக்கட்டணம் மற்றும் ஆன்–லைன் பதிவுக் கட்டணத்தினை சிறப்பு மையங்களில் பணமாகச் செலுத்தவேண்டும்) பத்தாம் வகுப்பு அல்லது சமமான தேர்வில் தேர்ச்சி பெற்ற தற்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் பள்ளி மாறுதல் சான்றிதழின் அசல் இடப் பெயர்வு சான்றிதழ் அசல் வேண்டும்.
மேற்குறிப்பிட்டுள்ள இணைப்புகளை சமர்ப்பிக்கும் தனித்தேர்வர்களின் விண் ணப்பங்களே ஆன்–லைன் பதிவுக்கு ஏற்றுக் கொள்ளப் படும்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1