லப்பைக்குடிக்காடு அருகே சீமை கருவேலி தோப்பு பகுதியில் மரத்தில் தூக்கில் தொங்கிய இளம் பெண் சடலம் மீட்பு!
பெரம்பலூர்,ஆக.12:லப்பைக்குடிக்காடு அருகே மரத்தில் தூக்கில் தொங்கிய இளம்பெண்ணின் சடலத்தை போலீசார் மீட்டு அவர் கொலை செய்யப்பட்டரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே திருமாந்துறைக்கும், லப்பைக்குடிக்காடு பேரூராட்சிக்கும் இடையே உள்ள சீமை கருவேலி தோப்பு பகுதியில் 21 வயது மதிக்கத்தக்க பெண் சடலமாக மரத்தில் தொங்கிய நிலையில் இருந்தார்.இது குறித்து பொது மக்கள் மங்களமேடு போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இளம் பெண்ணின் சடலத்தை மீட்டனர். மேலும் தூக்கில் தொங்கிய பெண் ரோஸ் கலர் ஜாக்கெட்டும், சிகப்பு கலர் தாவணியும், வெளிர் நிற பூ போட்ட பாவாடையும், மூக்குத்தியும் அணிந்திருந்தார்.சம்பவ இடத்திற்கு மோப்ப நாய், தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கைரேகை மற்றும் தடயங்களை சேகரித்தனர். போலீசார் இளம் பெண்ணின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து மங்களமேடு இன்ஸ்பெக்டர் சிவசுப்ரமணியம் விசாரணை நடத்தினார். இதில் இறந்த பெண் கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுகா பெரங்கியத்தை சேர்ந்த அய்யாவு& பூங்கொடி ஆகியோரின் மகள் சுஜாதா(21) என்பது தெரியவந்தது. இவரை கடந்த மே மாதம் 1ம் தேதி முதல் காணவில்லை என தொழுதூர் போலீசில் அய்யாவு புகார் அளித்தார். அதனை போலீசார் ஏற்கவில்லை.
உறவினர்கள் வீட்டில் தேடியும் சுஜாதா கிடைக்கவில்லை. இச்சம்பவத்தை தொடர்ந்து இது குறித்து அறிந்த அய்யாவு பெண்ணின் சடலத்தை பார்த்து அடையாளங்களை கூறி இறந்தது தன் மகள் தான் என்பதை உறுதிப்படுத்தினார். வீட்டில் கூலி வேலை பார்ப்பதற்காக இங்கு வந்திருப்பதாகவும் தெரிவித்தார்.
அய்யாவு அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து சுஜாதா தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டரா என்பது குறித்த விசாரணை நடத்தி வருகின்றனர்.
Category: மாவட்ட செய்தி



0 comments