தென்னிந்திய டென்னிஸ் பெரம்பலூர் பள்ளி முதலிடம்!
பெரம்பலூர்: பெரம்பலூர் கோல்டன்கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தென்னிந்தியஅளவில் முதலிடம் பெற்று சாதனை. இரட்டையர் பிரிவில் அசத்தும் இரட்டையர்களை தாளாளர், முதல்வர் பாராட்டினர்.
சேலம் மாவட்டம், ஏற்காட்டில் மான்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 9,10 தேதி களில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, பாண்டிச்சேரி மாநிலங்கள் பங்கு பெற்ற தென்னிந்திய அளவிலான பள்ளி மாணவ,மாணவியருக்கு இடையேயான டென்னிஸ் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
இதில் பெரம்பலூர் வெங்கடேசபுரத்திலுள்ள கோல்டன்கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் சூர்யா, விஜய் மற்றும் த்ரிலோக், சக்திராம், ராஜ்கண்ணா, லட்சுமண்பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். போட்டி பிரிவுகளில் ஒன் றான சப்.ஜுனியர் பிரிவில் மட்டும் 5 மாநிலங்களைச் சேர்ந்த 420பேர் கலந்து கொண்டனர்.
இதில் பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சூர்யா, விஜய் ஆகிய இருவரும் விளையாடினர். இவர்களை இறுதிச்சுற்றில் ஏற்காடு மான்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் எதிர்கொண்டனர். அவர்களை சூர்யா, விஜய் ஆகிய இருவரும் 6:1 என்ற செட் கணக்கில் வென்று தென்னிந்திய அளவில் முதலிடத்தை வென்றனர்.
இதில் விஜய் மட்டும் தனியார் ஒற்றையர்பிரிவில் கலந்து கொண்டு இரண்டாமிடத்தைப்பெற்றார். இப்பள்ளியைச் சேர்ந்த த்ரிலோக், சக்திராம், ராஜ்கண்ணா, லட்சுமணன்பாபு ஆகியோர் பல்வேறு பிரிவுகளில் தகுதிச்சுற்றுகளில் வெற்றி பெற்றனர். தென்னிந்திய அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ள சூர்யா, விஜய் உள்ளிட்ட மாணவர்களையும், அவர்களுக்கு பயிற்சியளித்த டென்னிஸ் பயிற்சியாளர் பாப்சிகரன் ஆகியோரை பள்ளி தாளாளர் ரவிச்சந்திரன், முதல்வர் அங்கயற்கண்ணி மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ,மாணவியர் பாராட்டினர்.
விஜய் மற்றும் சூரியா இவர்கள் இருவரும் திரு.ஊட்டி செல்லபிள்ளை ( ஊட்டி காபி பார் ) அவர்களின் புதல்வர்கள் . நமது ஊருக்கு பெருமை சேர்க்க முனையும் இவர்களின் முயற்சியை நாம் பாராட்டியே ஆக வேண்டும் .....................
Category: மாவட்ட செய்தி


0 comments