.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

தொழுதூர் TO பாடாலூர் சாலையில் 15,000 மரக்கன்று நடும்பணி துவக்கம்!

Unknown | 10:12 PM | 0 comments



பெரம்பலூர்,ஜூலை 8:
தொழுதூர் முதல் பாடாலூர் வரை. தேசிய நெஞ்சாலை ஒரங்களில் 15ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி துவங்கியது.
கடலூர் மாவட்டம் தொழுதூரில் துவங்கி, பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் 50 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த புளிய மரங்கள் 4வழிச்சாலை விரிவாக்கத்தின் போது அகற்றப்பட்டன.தொடர்ந்து ஐந்தாறு வருடங்களுக்குப் பிறகு, தேசிய நெடுஞ்சாலையை பராமரிக்கும் நிறுவனத்தால் சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கி நடந்து வருகிறது. இதன்படி 60 கிலோமீட்டர் நீளமுள்ள பெரம்பலூர் மாவட்ட தேசிய நெடுஞ்சாலையின் ஓரங்களில் தற்போது அரிஸ்டோனியா, பாதாம், வேம்பு, புங்கன், பூவரசு உள்ளிட்ட பல்வேறு வகைகளைச் சேர்ந்த மொத்தம் 15ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி நடந்து வருகிறது. இன்னும் ஒரு வாரத்தில் பணி முடிவடையவுள்ளது.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1