.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

பெரம்பலூர் துறைமங்கலம் நான்கு வழிச்சாலை வழிகாட்டி கம்பத்தில் லாரி பயங்கர மோதல்!

Unknown | 10:09 PM | 0 comments




பெரம்பலூர், ஜூலை 8:
பெரம்பலூரில் வழிகாட்டிப்பலகை கம்பத்தில் லாரி மோதி டிரைவர் கால்முறிந்தது. சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின் அவர் மீட்கப்பட்டார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியிலிருந்து இளநீர் லோடு ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று நேற்று முன்தினம் இரவு சென்னைக்கு புறப்பட்டது. பொள்ளாச்சியை சேர்ந்த காளிமுத்து(50) லாரியை ஓட்டினார். அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம்(30) கிளீனராக இருந்தார்.
நேற்று காலை பெரம்பலூர் துறைமங்கலம் 3 ரோடு ஏரிக்கரை அருகே 4 வழிச்சாலையில் சென்றபோது, எதிர்புறத்திலிருந்து வந்த கார் ஒன்று, �யூ டர்ன்� அடிப்பதற்காக திரும்பியது. அப்போது இளநீர் லோடு ஏற்றி வந்த லாரி டிரைவர், அந்த கார் மீது மோதாமல் இருப்பதற்காக லாரியை இடது புறமாக திருப்பினார். இதில் லாரி கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரம் இருந்த வழிகாட்டிப்பலகை கம்பத்தின் மீது பயங்கரமாக மோதியது.
அப்போது லாரியில் இருந்த கிளீனர் ஆறுமுகம் கீழே குதித்து லேசான காயத்துடன் தப்பினார். காளி முத்து நசுங்கிய லாரிக்குள் சிக்கிக் கொண்டார். தகவலறிந்த பெரம்பலூர் நிலைய தீயணைப்பு அலுவலர் ஜெகதீஷ் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று, சுமார் ஒரு மணி நேரம் போராடி டிரைவர் காளிமுத்துவை மீட்டனர். இந்த விபத்தில் அவரது கால் முறிந்தது. இதையடுத்து அவர் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இது பற்றி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1