வேப்பந்தட்டையில் இருபாலருக்கான அரசுக்கல்லூரி வகுப்புகள் நேற்று முதல் தொடங்கியது.
பெரம்பலூர்,ஜூலை8:
வேப்பந்தட்டையில் இருபாலருக்கான அரசுக்கல்லூரி வகுப்புகள் நேற்று முதல் தொடங்கியது.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையில் அரசு உத்தரவுப்படி 2014&2015ம் கல்வியாண்டில் புதிய அரசுக்கல்லூரி துவங்கப்படுமென அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, வேப்பந்தட்டையில் தமிழ், ஆங்கிலம், வணிகவியல், கணிதம், கணினிஅறிவியல் ஆகிய 5 வகுப்புகளைக் கொண்ட புதியஅரசுக்கல்லூரி தொடங்குவ தற்கு ஏற்பாடுசெய்யப்பட்டது.
இதன்படி வேப்பந்தட்டையில் புதிதாக அமையும் அரசு கலைஅறிவியல் கல்லூரிக் கென கடந்த ஜூன்மாதம் 6ம்தேதி முதல் 10ம் தேதி வரை மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு, ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடத்தி முடிக்கப்பட்டது. வகுப் புக்கு 60மாணவ, மாணவியர் வீதம் நடத்தப்பட்ட மாணவர் சேர்க்கையின்படி தமிழ், ஆங்கிலம், வணிகவியல் வகுப்புகளுக்கு தலா 60 பேர்களுக்கான சேர்க்கை ஓரளவுக்கு முடிக்கப்பட்டுள்ளது. ஒன்றிரண்டு இடங்கள் மட்டுமே காத்திருப்பில் வைக்கப் பட்டுள்ளது.
கணித வகுப்பிற்கு 44பேரும், கணினிஅறிவியல் வகுப்பிற்கு 22 பேர் சேர்ந்துள்ளனர். கல்லூரிக்கான சொந்தக்கட்டிடம் வேப்பந்தட்டை பருத்தி ஆராய்ச்சி நிலையம் எதிரே அமைவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அது வரை வேப்பந்தட்டை தாலுகா அலுவலகத்தின் 2 வது தளத்தில் 4 வகுப்பறைகளும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலுள்ள கூட்ட அரங்கில் ஒரு வகுப்பறையும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் 5 வகுப்பறைகளுக்கான மேசை, நாற்காலிகள் அரும்பாவூர், பூலாம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து பெறப்பட்டுள்ளது.
தமிழக முதல்வரால் இக்கல்லூரி ஏற்கனவே வீடியோ கான்பரன்சிங் முறையில் திறந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று முதல் வகுப்புகள் தொடங்கியுள்ளது. நேற்று காலை நடந்த நிகழ்ச்சியில் கல்லூரிமுதல்வர்(பொ) சேகர் கலந்து கொண்டு, கல்லூரியின் செயல்பாடுகள், பேராசிரியர்கள், மாணவ,மாணவியர் பின்பற்ற வேண்டிய கடமைகள் குறித்து விளக்கிப்பேசினார்.
நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் துரை சாமி, மூர்த்தி, ராமராஜ், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
வணிகவியல்துறைக்கு தலைவர் இல்லை
வேப்பந்தட்டையில் தொடங்கப்பட்டுள்ள அரசுக் கல்லூரிக்கு பொறுப்பு முதல்வராக நியமிக்கப்பட்டள்ள சேகர் என்பவர்தான், அக்கல்லூரி தமிழ்த்துறை தலைவராகவும் உள்ளார். அதே போல கணிதத்துறை தலைவராக துரைசாமியும், ஆங்கிலத்துறை தலைவராக மூர்த்தியும், கணினிஅறிவியல்துறை தலைவராக ராமராஜும் உள்ளனர். ஆனால் வணிகவியல் துறைத்தலைவர் பணியிடம் இன்னும் நியமிக்கப்படவில்லை. அப்பணியிடத்திற்கு கவுரவ விரிவுரையாளராக ஒருவரை நியமிக்க முடிவுசெய்யப் பட்டுள்ளதாக கல்லூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Category: மாவட்ட செய்தி


0 comments