பெரம்பலூரில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன!
பெரம்பலூரில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
பெரம்பலூர்
பெரம்பலூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், கலெக்டர் தரேஸ் அஹமது தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், பொது மக்கள் முதியோர் உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனைப்பட்டா, உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 453 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை சம்பந்தப்பட்ட அலுவலர் களிடம் அளித்து குறித்த காலத்திற்குள் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறு கலெக்டர் அறிவுறுத்தினார்.
தையல் எந்திரம்
நேற்றைய தினம் கலெக்டரிடம் தையல் எந்திரம் கேட்டு விண்ணப்பித்த குன்னம் கிராமத்தை சேர்ந்த கணவரை இழந்த நவமணிக்கு மாவட்ட பிற்படுத்தப்பட் டோர் மற்றும் சிறுபான்மை யினர் நலத்துறையின் மூலம் தையல் எந்திரத்தை வழங்கினார். மேலும் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத் தின் கீழ் 32 குழந்தைகளுக்கு ரூ.96 ஆயிரத்திற்கான நிதி ஆதரவு உதவித்தொகை காசோலை களை கலெக்டர் தரேஸ் அகமது வழங்கினார்.
அனைத்து உதவிகளும்
அனைத்து குழந்தை களிடமும் கல்வி நிலை குறித்தும், எதிர்காலத்தில் என்னவாக விரும்புகிறீர்கள் என்று கேட்டறிந்த கலெக்டர் குழந்தைகளின் கல்விக்கு தேவையான அனைத்து உதவிகளையும், வழிமுறை களையும் வழங்க வேண்டு மென்று மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலருக்கு அறிவுறுத் தினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜன் துரை, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மலை யாளம், குழந்தை நலக் குழு தலைவர் முகமது உசேன், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் ஜோசியாராஜன், குழந்தைகள் நல பாதுகாப்பு அலு வலர்கள் ராஜவேல், விமலா கலந்து கொண் டனர்.
Category: மாவட்ட செய்தி

0 comments