பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் கணினி பாடப்பிரிவு தொடங்க வலியுறுத்தல்!
அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் கணினி பாடப்பிரிவு தொடங்க தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை கணினி ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அரசு மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை கணினி ஆசிரியர்கள் சங்கத்தின் பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாநிலத் தலைவர் அ. அருள்ஜோதி தலைமை வகித்தார். மாநிலப் பொருளாளர் இரா. ஆனந்தகுமார், அரியலூர் மாவட்டத் தலைவர் மா. ரமேஷ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில், டி.ஆர்.பி. மூலம் நியமிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் கணினி பயிற்றுநர்களுக்கு, மற்ற ஆசிரியர்களைப் போல பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும். 5 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் கணினி பயிற்றுநர்களுக்கு, பணி விதி உருவாக்க வேண்டும். கிராமப்புற ஏழை மாணவர்களும் கணினி அறிவு பெறும் வகையில், அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் கணினி பாடம் தொடங்க வேண்டும். அனைத்து மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள கணினி பயிற்றுநர் காலியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறஐவேற்றப்பட்டன.
பெரம்பலூர் மாவட்டச் செயலர் பி. ரமேஷ், கணினி ஆசிரியர்கள் மு. செல்வராஜ், செ. உமாதேவி, கு. அகிலாண்டேஸ்வரி, ஜெ. தேவி, பி. சுதா, டி. தமிழரசன், ஜெயபால், முத்துலட்சுமி, பி. மஞ்சுளா, மு. அமுதாதேவி உள்பட பலர் பங்கேற்றனர். பெரம்பலூர் மாவட்டத் தலைவர் து. செந்தில்குமார் வரவேற்றார். பொருளாளர் மு. செந்தில்குமார் நன்றி கூறினார்.

Category: மாவட்ட செய்தி

0 comments