வேப்பந்தட்டை அருகே 2 மாணவிகள் தீக்குளித்து தற்கொலை!
வேப்பந்தட்டை அருகே வெவ்வேறு சம்பவங்களில் 2 மாணவிகள் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர்.
பள்ளி மாணவி
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள காட்டு கொட்டகையை சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவரது மகள் பவானி (வயது 13). பவானி லத்துவாடியில் உள்ள ஒரு பள்ளியில் 8–ம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில் கலிய மூர்த்தியும் அவரது மனை வியும் பூலாம்பாடியில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்திற்கு கிளம்பினர். அப்போது பவானியும் தானும் வருவேன் என்று கூறியுள்ளார். அதற்கு அவளது பெற்றோர் மறுத்து விட்டு வீட்டில் அக்காவிற்கு துணையாக இருக்குமாறு கூறி விட்டு சென்று விட்டனர்.
தீக்குளித்து தற்கொலை
இதனால் மனம் உடைந்த பவானி வீட்டில் இருந்த மண்எண்ணையை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பிய கலியமூர்த்தி மற்றும் உறவினர்கள் தற்கொலை செய்து கொண்ட பவானியின் உடலை போலீசாருக்கு தெரிவிக்காமல் சுடுகாட் டிற்கு கொண்டு சென்று தகனம் செய்தனர்.
இது பற்றி தகவல் அறிந்த உடும்பியம் கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ்குமார் அரும்பாவூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் பெரம்பலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சுருளி யாண்டி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
விடுதிக்கு செல்ல மறுப்பு
இதேபோல் வேப்பந் தட்டையை அடுத்த வெண் பாவூர் மீனவர் தெருவை சேர்ந்தவர் ராமர். இவரது மகள் தர்சினி (13). தர்சினி பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் விடுதி யில் தங்கி படித்து வந்தார். சனி மற்றும் ஞாயிற் றுக்கிழமை விடுமுறைக்கு வந்த தர்சினி மீண்டும் பள்ளி விடுதிக்கு செல்ல மறுத்தாள். அதற்கு அவளது பெற்றோர் விடுதியில் தங்கி படித் தால்தான் நல்ல முறையில் படிக்கலாம் என்று கூறி உள்ளனர்.
இதனால் மனம் உடைந்த தர்சினி வீட்டில் இருந்த மண்எண்ணையை தனது உடலில் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாள். இது பற்றி ராமர் கொடுத்த புகாரின் பேரில் கை.களத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
Category: மாவட்ட செய்தி

0 comments