என்ஜினீயரிங் பொது கலந்தாய்வில் எலக்ட்ரானிக் கம்யூனிகேசன் பிரிவு முதல் இடம் தொழில் கல்வியில் மெக்கானிக்கல் முதலிடம் பெற்றது!
சென்னை,
என்ஜினீயரிங் பொது கலந்தாய்வில் எலக்ட்ரானிக் கம்யூனிகேசன் என்ஜினீயரிங் பிரிவு முதல் இடத்தில் உள்ளது. தொழில் கல்வி கலந்தாய்வில் மெக்கானிக்கல் பிரிவு முதல் இடம் பெற்றிருக்கிறது.
என்ஜினீயரிங் கலந்தாய்வு
தமிழ்நாட்டில் 534 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் சேர்த்து 2 லட்சத்து 10ஆயிரத்து 653 இடங்கள் உள்ளன. இதில் அண்ணாபல்கலைக்கழகம் நடத்தும் கலந்தாய்வுக்கு 1 லட்சத்து 81 ஆயிரத்து 941 இடங்கள் வந்துள்ளன.
பிளஸ்–2 படிக்கும் போது தொழில் கல்வி படித்தவர்களுக்கு தொழில்கல்விக்கான கலந்தாய்வு நடத்தப்படுகிறது. மற்ற பிரிவினருக்கு பொது கலந்தாய்வு நடத்தப்படுகிறது.
எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் முதல் இடம்
கடந்த 7–ந்தேதி முதல் பொது கலந்தாய்வும், 9–ந்தேதி முதல் தொழில்கல்வி மாணவ–மாணவிகளுக்கான கலந்தாய்வும் நடைபெற்று வருகிறது. பொது கலந்தாய்வில் முதல் நாள் அன்று கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவை அதிக மாணவர்கள் விரும்பி எடுத்தனர். ஆனால் மொத்தத்தில் இதுவரை எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் பிரிவைதான் அதிக மாணவ–மாணவிகள் எடுத்துவருகிறார்கள். 4 ஆயிரத்து 244 பேர் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் பிரிவையும், மெக்கானிக்கல் பிரிவை 3 ஆயிரத்து 915 பேர்களும் தேர்ந்து எடுத்துள்ளனர்.
கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவை 2 ஆயிரத்து 884 பேர்களும், சிவில் பிரிவை 2 ஆயிரத்து 275 பேர்களும், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவை 2 ஆயிரத்து 439 பேர்களும் தகவல் தொழில்நுட்ப பிரிவை 1295 பேர்களும் எடுத்துள்ளனர்.
தொழில் கல்வியில் மெக்கானிக்கல் முதல் இடம்
பொது கலந்தாய்வில் மெக்கானிக்கல் பிரிவு 2–வது இடத்தில் இருந்தபோதிலும் தொழில்கல்விக்கான கலந்தாய்வில் 562 மாணவர்கள் தேர்ந்து எடுத்து முதல் இடம் பிடித்துள்ளது.
கடந்த பல வருடங்களாக மட்டுமல்ல இந்த வருடமும் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் பிரிவு தான் முதல் இடத்தில் இருக்கிறது. ஆனால் மெக்கானிக்கல் பிரிவை தேர்ந்து எடுப்போர் எண்ணிக்கை வருடத்திற்கு வருடம் அதிகரித்து வருகிறது. இந்த வருடம் மெக்கானிக்கல் பிரிவு மீது மோகம் மேலும் அதிகரித்து உள்ளது.
எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் பிரிவு எடுத்த மாணவர்களின் எண்ணிக்கைக்கும், மெக்கானிக்கல் பிரிவு எடுத்தோர் எண்ணிக்கைக்கும் அதிக வித்தியாசம் இல்லை. குறைந்த அளவிலேயே வித்தியாசம் இருக்கிறது. ஆனால் தொழில்கல்வி மாணவர்களில் மெக்கானிக்கல் பிரிவுதான் முதலிடம் வகிக்கிறது.

Category: மாணவர் பகுதி

0 comments