பெரம்பலூர் மாவட்டத்தில் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர நாளை கலந்தாய்வு தொடக்கம்!
பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்வதற்கான கலந்தாய்வு புதன்கிழமை (ஜூலை 16) தொடங்குகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிறுவனங்களில் 50 சத அரசு இட ஒதுக்கீட்டின் கீழ் சேர 8 மற்றும் 10 வகுப்பு கல்வித் தகுதியின் அடிப்படையில் மாணவ, மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
விண்ணப்பதாரர்களின் மதிப்பெண் பட்டியல் அடிப்படையில் கணிதம், அறிவியல் பாடங்களில் பெற்றுள்ள சராசரி மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கலந்துகொள்ள வேண்டிய நாள்களின் விவரம் குறித்து அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அதன்படி, 8-ம் வகுப்பு கல்வித்தகுதிக்குரிய நபர்களில் 87.0 சதம் முதல் 56.0 சதத்திற்குள் மதிப்பெண் பெற்றவர்களுக்கு ஜூலை 16 காலை 10 மணிக்கும், 55.5 சதம் முதல் 42.5 சதத்திற்குள் மதிப்பெண் பெற்றவர்களுக்கு பிற்பகல் 2 மணிக்கும், 42.0 சதம் முதல் 25.0 சதத்திற்குள் மதிப்பெண் பெற்றவர்களுக்கு 17-ம் தேதி காலை 10 மணிக்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது.
10-ம் வகுப்பு கல்வித் தகுதிக்குரிய விண்ணப்பதாரர்களில் 92.5 சதம் முதல் 71.5 சதத்திற்குள் மதிப்பெண் பெற்றவர்களுக்கு 17-ம் தேதி பிற்பகல் 2 மணிக்கும், 71.0 சதம் முதல் 63.5 சதத்திற்குள் மதிப்பெண் பெற்றவர்களுக்கு 18-ம் தேதி காலை 10 மணிக்கும், 63.5 சதம் முதல் 59.5 சதத்திற்குள் மதிப்பெண் பெற்றவர்களுக்கு பிற்பகல் 2 மணிக்கும், 59.5 சதம் முதல் 54.5 சதத்திற்குள் மதிப்பெண் பெற்றவர்களுக்கு 19-ம் தேதி காலை 10 மணிக்கும், 54.5 சதம் முதல் 52.0 சதத்திற்குள் மதிப்பெண் பெற்றவர்களுக்கு 19-ம் தேதி பிற்பகல் 2 மணிக்கும், 52.0 சதம் முதல் 48.5 சதத்திற்குள் மதிப்பெண் பெற்றவர்களுக்கு 21-ம் தேதி காலை 10 மணிக்கும், 48.5 சதம் முதல் 43.0 சதத்திற்குள் மதிப்பெண் பெற்றவர்களுக்கு 21-ம் தேதி பிற்பகல் 2 மணிக்கும் கலந்தாய்வு நடைபெறும்.
மேற்கண்ட தேதிகளில் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்கள் கலந்தாய்வில் கலந்துகொண்டு, தொழிற்பயிற்சி நிலையங்களில் தங்களுக்கு விருப்பமான பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்யலாம்.
Category: மாவட்ட செய்தி


0 comments