செயல்பாட்டை துவங்கியது மெட்ரோ ரயில் கட்டுப்பாட்டு மையம்!
மெட்ரோ ரயில் கட்டுப்பாட்டு மையம் கோயம்பேட்டில் அமைந்துள்ள நிர்வாக கட்டிடத்தில் செயல்படத் தொடங்கியுள்ளது.
இந்த கட்டுப்பாட்டு மையத்தின் உதவியால் அனைத்து ரயில்களின் போக்குவரத்தும் தானியங்கி கட்டுப்பாட்டு மையத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும். ரயில் நிலையங்களுக்கிடையே மக்களுக்கு பயனளிக்கும் விதமாக குரல் வழி அறிவிப்புகள் வழிகாட்டுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளன.
அதிகபட்ச பாதுகாப்பு மற்றும் சரியான நேரத்தில் ரயில்களின் வருகை, புறப்பாடு ஆகியவற்றை இந்த தானியங்கி கட்டுப்பாட்டு மையம் சிறப்பாக செயல்படுத்தும் என்றும். இதன் மூலம் அனைத்து ரயில்களின் போக்குவரத்தையும் கையாள முடியும் என்றும் மெட்ரோ ரயில் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Category: மாநில செய்தி

0 comments