.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

அமெரிக்கா, இஸ்ரேல் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்?

Unknown | 1:29 AM | 0 comments







சதாம் ஹுசைன் இராக்கில் இன அழிப்பில் ஈடுபட்டார் எனக் குற்றம்சாட்டி, அவரது அரசைக் கவிழ்த்து, அவரை நீதிமன்றத்தில் நிறுத்தி, மரண தண்டனைக் கொடுத்தது அமெரிக்கா. இப்படி இன்னொரு நாட்டு விவகாரத்தில் மூக்கை நுழைக்கலாமா என உலகமே கேட்டபோது, ‘சதாமின் மனித உரிமை மீறல்களை வேடிக்கைப் பார்க்கச் சொல்கிறீர்களா’ என திருப்பிக் கேட்டது அமெரிக்கா.

தாலிபான்கள் உஸாமாவுக்கு அடைக்கலம் கொடுத்ததாக குற்றம்சாட்டி, ஆப்கன் மீது போர் தொடுத்து, தாலிபான்களிடமிருந்து அதிகாரத்தைப் பறித்து, கர்சாய் தலைமையில் ஒரு பொம்மை அரசை நிறுவியது அமெரிக்கா. இன்னொரு நாட்டில் இப்படி தலையீடு செய்வது சரியா என உலகமே கேட்டபோது, ‘பயங்கரவாதத்தை ஒழிக்கவும், ஆப்கன் பெண்களை தாலிபான்களின் அடிமைப் பிடியிலிருந்து மீட்கவுமே இந்தத் தலையீடு’ என காரணம் சொன்னது அமெரிக்கா.

சிரியா அதிபர் பஸார் அல் அஸத், சொந்த நாட்டு மக்கள் மீதே இராசயன குண்டுகளை வீசினார் என குற்றம்சாட்டி, சிரியா மீது போர் தொடுப்போம் என மிரட்டியது அமெரிக்கா. ஐ.நா இருக்கும்போது இப்படி அமெரிக்கா அத்து மீறலாமா என உலகமே கேட்டபோது, ‘இனப்படுகொலை செய்யும் நாடுகளை நிதானமாக அணுகமுடியாது’ என பதில் சொன்னது அமெரிக்கா.

இலங்கையில் ஈழத்தமிழர் படுகொலையை செய்த ராஜபக்சேவுக்கு எதிராக ஐ.நா அவையில் தீர்மானம் கொண்டுவந்தது அமெரிக்கா. பல நாடுகள் அதை ஆதரிக்க மறுத்தபோது, ‘ராஜபக்சேவின் மனித உரிமை மீறல்களை கண்டிப்பது நம் கடமை அல்லவோ’ என விளக்கம் சொன்னது அமெரிக்கா.

இராக்கில், ஆப்கனில், சிரியாவில் அல்லது உலகத்தின் எங்கோ ஒரு மூலையில் ஏதேனும் மனித உரிமை மீறல்கள் நடந்தாலோ, இனப்படுகொலைகள் நிகழ்ந்தாலோ உடனே சினம் கொண்டு கர்ஜிக்கும் அமெரிக்கா, பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களை மட்டும் கண்டிக்க மறுப்பது ஏன்? பெண்கள் மீதும் குழந்தைகள் மீதும் ஏவுகணைகளை வீசும் இஸ்ரேலை தண்டிக்கத் தயங்குவது ஏன்? 50 ஆண்டுகளுக்கும் மேலாக திட்டமிட்ட இனஅழிப்பில் ஈடுபடும் இஸ்ரேல் மீது, நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்? இஸ்ரேலுக்கு எதிராக ஐ.நா அவையில் கொண்டுவரப்படும் தீர்மானங்களை முன்னின்று தோற்கடிப்பது ஏன்?

இதற்கான விடைகள் அதிர்ச்சியளிப்பவை.

இஸ்ரேலுக்கு வெளியே யூதர்கள் அதிகம் வசிப்பது நியூயார்க்கில் தான். இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவில் வாழும் யூதர்களை விட, நியூயார்க்கில் வாழும் யூதர்களின் எண்ணிக்கை அதிகம்.

அமெரிக்காவின் அரசியல், அறிவியல், மருத்துவம், வர்த்தகம், கலை, ஊடகம் அனைத்திலும் யூதர்களின் ஆதிக்கமே. வெள்ளைமாளிகையை இயக்குவதிலும், நாடாளுமன்றத்தை நகர்த்துவதிலும் அதிகாரம் மிக்கவர்கள் யூதர்கள்.

இரட்டை கோபுரங்கள் வீழ்ந்த இடத்தில் விடுதலைக் கோபுரம் கட்ட முடிவெடுத்த அமெரிக்கா, டானியல் எனும் யூதக் கட்டிட கலைஞரிடமே அதற்கான வரைபடத்தை வாங்கியது. 9/11 தாக்குதல் நடைபெற்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னத்தை கட்டியதும் சில்வர் ஸ்டேய்ன் எனும் யூதரே. அமெரிக்காவில் யூதர்களின் கைபடாத அடையாளங்களே இல்லை எனும் அளவுக்கு எங்கும் எதிலும் யூத மயம்.

உலகத்தில் வாழும் அனைத்து யூதர்களின் உரிமைகளுக்காகவும், நலன்களுக்காவும் இயங்கும் யூத அமைப்பின் தலைமை அலுவலகமே அமெரிக்காவில்தான் உள்ளது. Anti-Defamation League (ADL) எனும் அவ்வமைப்பு 1913 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. யூதர்கள் தமக்காக அமெரிக்காவில் அமைப்பு தொடங்கி, ஏறத்தாள 100 ஆண்டுகள் ஆகிறது. கடந்த மார்ச் மாதம் நான் அமெரிக்கா சென்றிருந்தபோது, டெட்ராய்ட் நகரிலுள்ள அவ்வமைப்பின் அலுவலகத்துக்கு நேரில் சென்று, அமெரிக்காவில் யூதர்களின் நிலை குறித்து பல்வேறு தகவல்களையும் அறிந்து கொண்டேன்.

எனவே, எந்தக் காலத்திலும் அமெரிக்கா இஸ்ரேலை விட்டுக் கொடுக்காது. ஐ.நா.வும் இஸ்ரேலை எதிர்த்து ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடாது. உலகமே கண்டித்தாலும் இஸ்ரேலை அமெரிக்கா கண்டிக்காது. ஏனென்றால், அமெரிக்காதான் இஸ்ரேல்; இஸ்ரேல்தான் அமெரிக்கா!

..ஆளூர் ஷாநவாஸ்.


 

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1