.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

சவுதி அரேபியாவின் தலைமை முஃப்தி அவர்கள் வெள்ளி மேடையில் தொலை காட்சி தொடர் பற்றி கடுமையாக விமர்சித்தார்.

Unknown | 1:30 AM | 0 comments

 காமத்தை வளர்க்கும் தொலை காட்சி தொடர்களை இஸ்லாமிய அரசுகள் தடை செய்ய வேண்டும். உணர்வுள்ள முஸ்லிம்கள் வெறுத்து ஒதுக்க வேண்டும் என்று வெள்ளி மேடையில் சவுதியின் தலைமை முஃப்தி முழங்கினார்.

உறவுகளுக்குள்ளே வழி தவறும் மனிதர்கள்என்ற தலைப்பில் பிரபல தொலை காட்சி நிறுவனமான M.B.C. நிறுவனம் ஒரு தொலைகாட்சி தொடரை தயாரித்துள்ளது. அந்த தொலைகாட்சி தொடரை ரமலான் முதல் ஒளிபரப்ப போவதாகவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த விசயம் சவுதி மார்க்க அறிஞர்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து மார்க்க அறிஞர்கள் இதற்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். சவுதி அரேபியாவின் தலைமை முப்தி அவர்கள் வெள்ளி மேடையில் இதை கடுமையாக விமர்சித்தார்.

உறவுகளிடையே நடைபெறுகின்ற தவறான செயல்களை படம் பிடித்து காட்டுவதின் மூலம் சமூகத்தை சீரழிக்க தொலைகாட்சி நிறுவனங்கள் முயற்சிக்கின்றன.சமூக சீரழிவுக்கு காரணமாக அமையும் தொலைகாட்சி தொடர்களை அந்த நிறுவனங்களே முன்வந்து நிறுத்த முனைய வேண்டும். இல்லையேல் அரசாங்கம் தனது வலிமையை பயன்படுத்தி அது போன்ற தொடர்களுக்கு தடை விதிக்க வேண்டும். இதுபோன்ற தொடர்களை ஒளிபரப்புவதும் அதை பார்ப்பதும் அதை செவியுறுவதும் மார்க்கத்தின் அடிப்படையில் ஹராம் ஆகும் என வெள்ளிமேடை உரையில் அவர் தெளிவுபடுத்தினார்

மேலும் இது போன்ற விபச்சாரத்தை வளர்க்கும் தொலை காட்சி தொடர்களை இறைவனுக்கு அஞ்சி மக்கள் புறக்கணிக்க முன் வரவேண்டும் என்றும் மக்களை அவர் கேட்டு கொண்டார். சவுதியில் மட்டும் இல்லாமல் எங்கெல்லாம் முஸ்லிம்கள் உள்ளார்களோ அவர்கள் அனைவர்களும் இது போன்ற தொலை காட்சி தொடர்களை புறக்கணிப்பதின் மூலம் தங்களது இறைநம்பிக்கையை உறுதி படுத்தி கொள்ள வேண்டும் என்றும் உலக சமுதாயத்தை அவர் வேண்டி கொண்டார்.

அனைத்து அரபி தொலை காட்சி நிறுவனங்களுக்கும் இந்த கோரிக்கையை முன் வைத்து அவர் கடிதமும் எழுதியுள்ளார். அரசுக்கும் இது போன்ற தொலை காட்சி தொடர்களுக்கு தடை விதிக்கு மாறு அறிவுரை கூறியுள்ளார்.

அரபு நாடுகளில் மட்டும் இல்லாமல் தமிழகத்திலும் காமத்தை தூண்டும் பல் வேறு தொலை காட்சி தொடர்கள் ஒளி பரப்பப்பட்டு வருவதை நாம் அறிவோம்.

தமிழகத்தில் அவைகளை கரம் கொண்டு தடுத்து நிறுத்தும் வலிமை நம்மிடம் இல்லாததால் இறை நம்பிக்கை இறுதி நிலையாக உள்ள மனதால் அவைகளை வெறுத்து ஒதுக்கும் செயல்களை முஸ்லிம்கள் செய்ய வேண்டும்.

அப்படி செய்வதின் மூலம் நமது உள்ளங்களில் சிறிதளவாவது இறை நம்பிக்கை குடி கொண்டு உள்ளது என்பதை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.

தகவல் தந்தவருக்கு நன்றி.



 

Category: ,

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1