பெரம்பலூர் கலெக்டர் முயற்சியால் செயற்கை காது பொருத்தி கேட்கும் திறன்பெற்ற சிறுமி!
பெரம்பலூர், ஜூலை 22:பெரம்பலூர் கலெக்டர் முயற்சியால் செயற்கை காது பொருத்தி கேட்கும் திறன்பெற்ற சிறுமி!
பெரம்பலூர் கலெக்டர் முயற்சியால் சென்னையில் தங்கி மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு செயற்கை காது பொருத்திக் கொண்ட 6 வயது சிறுமி ஓராண்டு பயிற்சிக்குப் பின்னர் கேட்கும் திறனை பெற்றுள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம், செங்குணம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வக்குமார். விவசாயி. இவரது மனைவி சுமதி. தம்பதிக்கு ஜெயஸ்ரீ என்ற மகளும், கவிஷ்குமார் என்ற மகனும் உள்ளனர். இவர்களில் பிறந்தது முதல் கேட்கும் திறனற்று இருந்த ஜெயஸ்ரீக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க பெற்றோர் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு மேலாக சிறுமியை அழைத்துக்கொண்டு பல்வேறு தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்று மருத்துவரிடம் காண்பித்து ஆலோசனை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சைக்கான பெருந்தொகையை அவர்களால் செலுத்த முடியாததால் அனைத்து முயற்சிகளும் தடைப்பட்டு வந்தன. இந்நிலையில், கடந்த ஓராண்டுக்கு முன்னர் அங்கன்வாடி மைய ஊழியர் மூலமாக இலவச மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துவரப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு, லட்சக்கணக்கில் செலவுசெய்து சென்னையில் தான் சிகிச்சை பெற முடியும் என தெரிவிக்கப்பட்டது. இதையறிந்த பெரம்பலூர் கலெக்டர் தரேஸ் அஹமது அவர்களை சென்னைக்கு சென்று தங்கியிருந்து தமிழக அரசின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற பரிந்துரைத்தார்.
இதன்படி அங்கு சென்ற பெற்றோர் பிள்ளைகளுடன், சிகிச்சைஅளிக்கப்பட்ட பூந்தமல்லி, கேகேஆர் இஎன்டி ஹாஸ்பிடலின் அருகேயே புரசைவாக்கத்தில் வீடு பார்த்து தங்கிக் கொண்டனர். மருத்துவர்கள் ஜெயஸ்ரீயின் வலது பக்க காதுஅருகே தலையில் அறுவை சிகிச்சை செய்து மெட்டலால் ஆன செயற்கைக் காது ஒன்றினை உள்ளே வைத்து தையல் போட்டனர். பின்னர், வழக்கமான காது கேட்கும் மெஷின் ஒன்றை காதில் வைத்து, அதன் மற்றொரு பகுதியை தலையின் உள்ளே வைத்துள்ள மெட்டலுடன் காந்த ஈர்ப்பு விசைமூலம் ஒவ்வொரு முறையும் ஒட்டவைத்தும் குளிக்கும் போது தனியாக பிரித்துவைக்கும் வசதியுடன் செய்துதரப்பட்டுள்ளது. இவ்வாறு ரூ.10 லட்சம் மதிப்பீட்டிலான உயரிய மருத்துவ சிகிச்சை பெற்ற சிறுமி கடந்த ஓராண்டுக்கு மேல் பயிற்சி பெற்று தற்போது கேட்கும் திறன் பெற்றுள்ளார். இருப்பினும், தொடர்ந்து சிறுமிக்கு மேலும் 5 ஆண்டுகள் பயிற்சியளிக்க வேண்டும் என்பதால் சிறுமியின் குடும்பத்தினர் சென்னையிலேயே தங்கியுள்ளனர். மேலும், சேத்துபட்டிலுள்ள �அவர் லேடி� பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஜெய ஸ்ரீயை 1ம் வகுப்பில் சேர்த்துள்ளனர். குழந்தைக்காக செங்குணத்திலிருந்து சென்னைக்கு இடம் பெயர்ந்த செல்வக்குமார் அங்குள்ள ஓட்டலில் வேலை பார்த்து வருகி றார்.
இந்நிலையில், சிறுமியும், பெற்றோரும் பெரம்பலூருக்கு நேற்று வந்து கலெக்டர் தரேஸ் அஹமதுவுக்கு நன்றி தெரிவித்தனர். ரூ.13 லட்சம் செலவாகக் கூடிய சிகிச்சையை ரூ.10 லட்சத்தில் அதுவும் காப்பீட்டுத் திட்டத்தில் இலவசமாக செய்து தரப்பட்டதற்கு நன்றி கூறினர்.

Category: மாவட்ட செய்தி

0 comments