.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

வெளிநாடு வாழ் தமிழர்களுக்காக நல வாரியம் அமைக்க வேண்டும்!வளைகுடா தமிழர்கள் கோரிக்கை!

Unknown | 10:38 PM | 0 comments

துபாய், ஜூலை 22:
வெளிநாடு வாழ் தமிழர்கள் நலன் காக்க தனி நல வாரியத்தை செயல்படுத்த வேண்டும் என யுஏஇ தமிழ் அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
வளைகுடா உளளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் லட்சக்கணக்கான தமிழர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் நலன் காக்கும் வகையில் தமிழகத்தில் வெளிநாடு வாழ் தமிழர் நல சட்டம், 2011ல் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, வெளிநாடு வாழ் தமிழர் நலனுக்காக, தனி நிதியம் உருவாக்க வழி செய்யப்பட்டு, அதை கையாளவும், வெளிநாடு வாழ் தமிழர் நலன் காக்கவும் வாரியம் ஒன்றை உருவாக்கவும் சட்டம் அனுமதிக்கிறது. ஆனால், இதுவரை நல வாரியம் அமைக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இது குறித்து, துபாய் தமிழ் சங்கத் தலைவர் ஜெயந்திமாலா சுரேஷ் கூறுகையில், �வெளிநாடுகளில் தமிழர்கள் பெரும்பாலும் தொழிலாளர்களாக வேலை செய்து வருகிறார்கள். இவர்கள் தாயகம் திரும்பினால், தொழில் செய்ய கடன் பெற மிகுந்த சிரமாக உள்ளது. நல வாரியம் அமைக்கும் பட்சத்தில், அதன் மூலம் நிர்வாகிக்கப்படும் நிதியத்தின் மூலம் கடன் பெற ஏதுவாக இருக்கும். மேலும், வாரியத்தின் மூலம் குறைதீர் முகாம்கள் நடத்தப்பட்டு, வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்களின் பிரச்னைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணலாம். தமிழகத்தில் உள்ள போலி ஏஜென்டுகளிடம் மக்கள் ஏமாறுவதற்கும் முடிவு கட்ட முடியும்� என் றார்.
துபாய் ஈமான் சமூக நல தமிழ் அமைப்பினர் பொது செயலாளர் லியாக்கத் அலி கூறுகையில், �வெளிநாட்டில் பணிபுரியும் தமிழர்கள் மரணமடையும் போது அவர்கள் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வருவதில் ஏற்படும் பொருளாதார சிக்கலை நல வாரியத்தின் மூலம் சமாளிக்க முடியும்� என்றார்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1