பெரம்பலூரில் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போனில் தொல்லை கொடுத்த சிறுவனை போலீசார் கைது செய்தனர்!!
போலீஸ் கட்டுப்பாட்டு அறை
பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அவசர தொலைபேசி அழைப்பு எண் 100–க்கு அடிக்கடி போன்அழைப்புகள் வந்தன. எதிர் முனையில் இருந்து பேசியவர் போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டினார்.
அந்த நபர் கடந்த 24–ந்தேதி முதல் 30–ந்தேதிவரை அடிக்கடி போன் செய்து போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். ஏறத்தாழ ஒரே நேரத்தில் 25 அழைப்புகள் வந்துள்ளன. மகளிர் போலீசார் போனை எடுத்து பேசினாலும், அவர்களுக்கும் இதே நிலை நீட்டித்தது.
பொறி வைத்து பிடித்தனர்
இதுகுறித்து கட்டுப்பாட்டு அறை போலீஸ் சப்– இன்ஸ் பெக்டர் மரிய ஆரோக்கியம் பெரம்பலூர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, தொலை தொடர்புத்துறையினர் உதவியுடன் போனில் திட்டியவரை பொறி வைத்து பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர்.
இதில் போலீசாருக்கு போனில் தொல்லை கொடுத்தது ஒரு சிறுவன் என்பது தெரியவந்தது.
சிறுவன் கைது
இதையடுத்து போலீசார் அந்த சிறுவனை கைது செய்து பெரம்பலூர் குற்றவியல் கோர்ட்டில் நீதிபதி சுரேஷ் முன்னிலையில் ஆஜர் படுத்தினர். நீதிபதி வழக்கை விசாரித்து அந்த சிறுவனை 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
Category: மாவட்ட செய்தி
0 comments