பாகிஸ்தானில் ரம்ஜான் கொண்டாட்டத்தில் சோகம்: கடலில் மூழ்கி 20 பேர் பலி!!
ஆனால் விடுமுறை தினமான அன்று கூட்டம் அதிகமாக இருந்ததால் காவல்துறையினரின் அறிவுரைகளையும் மீறி மக்கள் கடலில் இறங்கியுள்ளனர். இவர்களில் நீரில் மூழ்கி 20 பேர் இறந்துள்ளதாகவும், மூன்று பேரைக் காணவில்லை என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. இறந்தவர்களில் 12 வயதுப் பையன் ஒருவனும், ஒரே குடும்பத்தின் மூன்று உறுப்பினர்களும் அடங்குவர் என்று கூறப்பட்டுள்ளது.
கடற்படை நீச்சல்வீரர்கள் மற்றும் ஹெலிகாப்டர் உதவியுடன் தேடுதல் பணி நடைபெற்று வருவதாக கராச்சியின் கமிஷனர் ஷோயப் அஹமத் சித்திகி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு எச்சரிக்கைகளையும் மீறி கடலில் இறங்கிய இவர்கள் அதிக காற்று மற்றும் வலுவான நீரோட்டத்தினால் கடலில் மூழ்கி விட்டதாக அவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
மற்றொரு கடற்கரைப் பகுதியான ஹாக்ஸ் பேயிலிருந்து இரண்டு உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக இணையதளப் பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது. பருவகாலம் தொடங்கிய ஜூன் முதலே கடலில் குளிக்கவேண்டாம் என்று எச்சரித்துள்ள அரசு பாதுகாவலுக்கு வீரர்களையும் நிலை நிறுத்தியுள்ளது. இருப்பினும் மக்கள் அவற்றை அலட்சியப்படுத்தியதால் இந்த சம்பவம் நடந்துள்ளது என்று மூத்த காவல்துறை அதிகாரி இபடட் நிசார் தெரிவித்துள்ளார்.
Category: உலக செய்தி
0 comments