பெரம்பலூரில் நடந்த கல்விக்கடன் முகாமில் 537 மாணவ–மாணவிகளுக்கு ரூ.9¾ கோடி கல்வி கடனுக்கான ஆணை கலெக்டர் தரேஸ் அஹமது வழங்கினார்
பெரம்பலூரில் நடந்த கல்விக்கடன் முகாமில் 537 மாணவ, மாணவிகளுக்கு ரூ.9¾ கோடி கல்விக்கடன் உதவிகளை கலெக்டர் தரேஸ் அஹமது வழங்கினார்.கல்விக்கடன் முகாம்
பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வங்கிகளும் பங்கு பெற்ற பெரம்பலூர், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியங்களுக்கான கல்விக்கடன் முகாம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த முகாமிற்காக மாவட்ட கலெக்டர் அலுவலக தரை தளம், முதல் தளம், இரண்டாம் தளங்களில் உள்ள கூட்ட அரங்குகளில் பல்வேறு வங்கிகள் பங்கு கொண்ட கவுண்டர்களும் அமைக்கப் பட்டு விரிவான ஏற்பாடுகள் செய்யப்படடிருந்தன.
முகாமில் மாணவ, மாணவிகளுக்கு 664 விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டன. இதில் 586 விண்ணப்பதாரர்களின் விவரங்கள் 10 கணினிகள் மூலம் பதிவு செய்யப்பட்டு அவர்களுக்கு ஒப்புகை சீட்டுகள் வழங்கப்பட்டன. வங்கியாளர்களிடம் மாணவ, மாணவிகள் கல்விக் கடன் :கேட்டு வழங்கிய 537 விண்ணப்பங்களும் வங்கியாளர்களால் பரிசீலிக்கப்பட்டன. அவர்கள் அனைவரின் கல்லூரி கட்டண விவரங்கள் சரிபார்க்கப்பட்டதன் அடிப்படையில் அனைவருக்கும் கல்விக்கடன் பெறுவதற்கு ஏற்பளிப்பு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
ரூ.9¾ கோடி கடன்
முகாமில் 537 மாணவ, மாணவிகளுக்கு ரூ.9 கோடியே 72 லட்சத்து 96 ஆயிரம் கல்விக்கடன் பெறுவதற்கான ஏற்பளிப்பு ஆணைகளை பெரம்பலூர் கலெக்டர்தரேஸ் அஹமது வழங்கினார்.
முகாமில் மருதைராஜா எம்.பி., தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் ராஜன்துரை, உதவி கலெக்டர் மதுசூதன் ரெட்டி, பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ஜெயக்குமார், திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) அய்யம் பெருமாள், முன்னோடி வங்கி மேலாளர் சந்திரசேகரன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முதன்மை மேலாளர் ராஜா(தஞ்சை), கனரா வங்கியின் உதவி பொது மேலாளர் ராமசாமி, முதன்மை மேலாளர் சுரேஷ்குமார் உள்பட அரசு அலுவலர்கள், வங்கியாளர்கள், மாணவ, மாணவிகள், அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
Category: மாவட்ட செய்தி
0 comments