பெரம்பலூர் மாவட்டத்தில் வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்த 43 ஆயிரம் குழந்தைகளுக்கு ஓஆர்எஸ் பாக்கெட் வினியோகம்!
வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்த பெரம்பலூர் மாவட்டத்தில் 43 ஆயிரம் குழந்தைகளுக்கு ஓஆர்எஸ் பாக்கெட் வினியோகிக்கப்பட உள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுச்சுகாதாரத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந் தைகள் வளர்ச்சித்திட்ட துறைகளின் சார்பில் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்த தீவிர பிரசார முகாம் நேற்று பெரம்பலூர் துறைமங்கலம் அங்கன்வாடி மையத்தில் நடைபெற்றது. முகாமினை பெரம்பலூர் எம்எல்ஏ தமிழ்ச்செல்வன் முன்னிலையில், மாவட்ட கலெக் டர் (பொ) ராஜன்துரை துவக்கி வைத்து பேசுகையில்,
வயிற்றுப் போக்கினால் உடலில் ஏற்படும் நீர் பற்றாக்குறையின் காரணமாக உயிர் இழப்பு ஏற்படுவதை தடுக்க அரசு உத்தரவுப்படி வயிற்றுப்போக்கினை கட்டுப்படுத்தும் தீவிர பிரசார முகாம்கள் நடத்தப்படுகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் 28ம் தேதி முதல் ஆகஸ்டு 8ம் தேதிவரை அனைத்து அங்கன்வாடி பணியாளர்கள் மூலமாக 5வயதிற்குட்பட்ட குழந்தைகள் உள்ள அனைத்து வீடுகளுக்கும் வயிற்று போக்கினால் ஏற்படும் நீர்பற்றாக்குறையை சரி செய்யும் ஓஆர்.எஸ் பவுடர் பாக்கெட் வினியோகம் செய்யப்படுவதுடன், அதனைப் பயன்படுத்தும் முறைகள்குறித்து தெரிவிக்கப்படும்.
இந்த முகாம்களின் மூலம் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 5வயதிற்குட்பட்ட குழந்தைகள் 43,189 பேருக்கு ஓஆர்எஸ் பாக் கெட் வழங்கப்படவுள்ளது. மேலும் ஊட்டச் சத்துக் குறைபாட்டை தவிர்க்கவும் வயிற்றுப்போக்குள்ள குழந்தைகளுக்கு சுகாதார செவிலியர் மூலமாக துத்தநாக மாத்திரை 14 நாட்களுக்கு வழங்கப்படும் என்றார்.நிகழ்ச்சியில் பெரம்பலூர் ஒன்றியக்குழு தலைவர் கல்பாடி ஜெயக்குமார், நகராட்சி துணைத்தலைவர் ஆர்டி.ராமச்சந்திரன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சேகர், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் புவனேஸ்வரி உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.
பெண்கள் குமுறல்
பெரம்பலூர் துறைமங்கலத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கலெக்டர்(பொ)ராஜன்துரை, எம்எல்ஏ தமிழ்ச்செல்வன் ஆகியோர் அங்கன்வாடி மையத்தின் அருகிலுள்ள வீடுகளுக்குச் சென்று ஓஆர்.எஸ் பவுடர் பாக்கெட்டை வினியோகித்தபோது, அவர்களை சூழ்ந்து கொண்ட பெண்கள், ஏரிப்பகுதியில் புதர்கள் மண்டிக் கிடக்கிறது. வீட்டுமனை பட்டா கேட்டு பல மாதம் காத்திருக்கிருக்கிறோம் நடவடிக்கையே இல்லாமல் உள்ளது எனக்கூறி குமுறத் தொடங்கினர். அவர்களை சமாதானப்படுத்தி சமாளித்த அவர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
Category: மாவட்ட செய்தி
0 comments