லப்பைகுடிகாடு அருகே அமைய உள்ள பாரதிதாசன் பல்கலைகழக உறுப்பு மாதிரி மகளிர் கலை அறிவியல் கல்லூரி கட்டுமான பணி கலெக்டர் & M.P ஆய்வு!
பெரம்பலூர் மாவட்டம் லப்பைகுடிகாடு அருகே ரூ.7.25 கோடிமதிப்பீட்டில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் வேப்பூரில் கட்டப்பட்டுவரும் பாரதிதாசன் பல்கலைகழக உறுப்பு மாதிரி மகளிர் கலை அறிவியல் கல்லூரி கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ்அஹமது இ.ஆ.ப., மற்றும் சிதம்பரம் பாராளுமன்ற திரு.மா.சந்திரகாசி அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ரூ.7.25 கோடிமதிப்பீட்டில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் வேப்பூரில் கட்டப்பட்டுவரும் பாரதிதாசன் பல்கலைகழக உறுப்பு மாதிரி மகளிர் கலை அறிவியல் கல்லூரி கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ்அஹமது இ.ஆ.ப., மற்றும் சிதம்பரம் பாராளுமன்ற திரு.மா.சந்திரகாசி அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அதன் விபரம் வருமாறு:
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் மாணவ, மாணவிகளின் உயர் கல்விக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் மாவட்டம் வேப்பூரில் கடந்த ஆண்டு 13.9.2013 அன்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் பெண்களுக்கென்று பாரதிதாசன் பல்கலைகழக உறுப்பு மாதிரி மகளிர் கலை அறிவியல் கல்லூரியினை காணொலி காட்சியின் மூலம் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து இக்கல்லூரி வகுப்புகள் தற்காலிகமாக வேப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்று வருகின்றது. இக்கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கென்று விடுதி வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வேப்பூரிலேயே இக்கல்லூரிக்காக ரூ.7.25 கோடிமதிப்பீட்டில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் 3 தளங்களுடன் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் 21 வகுப்பறைகளும், உயிர் தொழில் நுட்பவியல், கணனி அறிவியல், இயற்பியல் உள்ளிட்ட 4 பாடங்களுக்கான குளிரூட்டப்பட்ட ஆய்வு கூடங்களும், நுலகமும், கலையரங்கமும், 3 ஏக்கரில் விளையாட்டு மைதானம் உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய வகையில் இக்கல்லூரி மிகப்பொலிவுடன் உருவாக்கப்பட்டு வருகிறது. பெரம்பலூர் மட்டுமல்லாது, பெரம்பலூரை சுற்றியுள்ள மாவட்டங்களைச் சோந்த பெண்களுக்கும் இக்கல்லூரி வரபிரசாதமாக உள்ளது. தற்போது தரைதளம் மற்றும் முதல்தளம் கட்டப்பட்டுள்ள நிலையில் இரண்டாவது தளத்திற்கான கட்டிடப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இக்கட்டுமான பணிகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர், பணிகளை விரைந்து முடித்து மாணவிகளின் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டுவர தொடர்புடைய அலுவலர்களக்கு உத்தரவிட்டனர்.
இந்த ஆய்வின்போது மாவட்ட ஊராட்சி குழுத்தலைவலர் திருமதி.சகுந்தலாகோவிந்தன், மாவட்ட ஊராட்சிக்குழுஉறுப்பினர் திருமதி.மகேஸ்வரிகிருஷ்ணசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Category: மாவட்ட செய்தி
0 comments