.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

குரூப் 1 முதல்நிலை தேர்வு !வரலாறு காணாத வகையில் 55 சதவீதம் பேர் ஆப்சென்ட்!

Unknown | 9:58 PM | 0 comments


சென்னை, ஜூலை 21:
தமிழகம் முழுவதும் நேற்று நடந்த �குரூப் 1 � முதல்நிலை தேர்வில் 89,433 (55 சதவீதம்) பேர் தேர்வு எழுதவரவில்லை. சென்னையில் 21,692 பேர் ஆப்சென்ட் ஆகியுள்ளனர். இவ்வளவு பேர் தேர்வு எழுத வராததற்கு என்ன காரணம் என்று டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் உயர் பதவிகளான துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட பணிகளுக்கு குரூப் 1 தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி குரூப் 1 பதவியில் அடங்கிய துணை கலெக்டர் (3), போலீஸ் டிஎஸ்பி (33), வணிகவரித் துறை இணை ஆணையாளர் (33) மற்றும் ஊரக வளர்ச்சித்துறை இணை இயக்குனர் (10) ஆகிய 79 பதவிகளுக்கான முதல் நிலைத் தேர்வு ஜூலை 20ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, நேற்று குரூப் 1 முதல்நிலை தேர்வு நடந்தது. இத்தேர்வை எழுத தமிழகம் முழுவதும் மொத்தம் 1 லட்சத்து 62 ஆயிரத்து 606 பேர் அனுமதிக்கப்பட்டனர். சென்னையில் மட்டும் 35,675 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இதற்காக மாநிலம் முழுவதும் 32 மாவட்டங்களில் 557 தேர்வு கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
சென்னையில் திருவல்லிக்கேணி என்.கே.டி. மேல்நிலைப்பள்ளி, சி.எஸ்.ஐ. கெல்லட் மேல்நிலைப்பள்ளி, மயிலாப்பூர் சிறுவர் தோட்ட மேல்நிலைப்பள்ளி, சாந்தோம் செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல் நிலைப்பள்ளி, மேற்கு சைதாப்பேட்டை சென்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ராணி மேரி கல்லூரி, காயிதே மில்லத் மகளிர் கல்லூரி என மொத்தம் 108 அரசு பள்ளிகள், கல்லூரிகளில் இத்தேர்வு நடந்தது.
காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு மதியம் 1 மணி வரை நடந்தது. தேர்வு எழுதுவதற்கு பல மையங்களில் ஆண்களும், பெண்களும் காலை 8 மணிக்கே வரத் தொடங்கினர். இதற்கு ஏதாவது ஒரு டிகிரி தேர்ச்சி அடிப்படை தகுதியாக கேட்கப்பட்டிருந்தது. ஆனால் தேர்வை ஏராளமான முதுநிலை, மருத்துவம், இன்ஜினியரிங் படித்த பட்டதாரி மாணவ& மாணவிகளும் எழுதினர்.
பல பெண்கள் கைக்குழந்தையுடன் தேர்வு எழுத வந்திருந்தனர். அவர்கள் தேர்வு எழுத சென்ற நேரத்தில் குழந்தையை கணவன்மார்கள் பார்த்துக் கொண்டனர். தேர்வு எழுதுவோர், சோதனை செய்யப்பட்ட பிறகே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். கால்குலேட்டர், செல்போன் போன்றவற்றை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. தேர்வில் முறைகேடுகள் ஏதும் நடக்காமல் தடுக்க மாவட்டங்களில் கலெக்டர்கள் தலைமையில் பறக்கும் படைகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மேலும், தலைமை கண்காணிப்பாளர் 570 பேர், கண்காணிப்பாளர் 7009 பேர், ஆய்வு அதிகாரிகள் 570 பேர் ஈடுபடுத்தப்பட்டனர்.
சென்னையில் மட்டும் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் கண்காணிப்பில் தேர்வுகள் நடந்தது. பல்வேறு மையங்களில் அதிரடி சோதனையும் நடத்தப்பட்டது. தேர்வு நடந்த அனைத்து இடங்களிலும் வீடியோ கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது. முறைகேடு நடக்கும் என்று கண்டறியப்பட்ட மையங்கள் வெப் கேமரா மூலம் சென்னையில் இருந்து கண்காணிக்கப்பட்டது. தேர்வு நடைபெற்ற அனைத்து பள்ளிகள் முன்பும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
டி.என்.பி.எஸ்.சி. தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் திருவல்லிக்கேணியில் உள்ள சி.எஸ்.ஐ. கெல்லட் மேல்நிலைப்பள்ளி, மயிலாப்பூர் சிறுவர் தோட்ட மேல்நிலைப்பள்ளியில் திடீரென ஆய்வு செய்தார். அப்போது, தேர்வுக்கட்டுப் பாட்டு அதிகாரி ஷோபனா உடன் இருந்தார்.
தேர்வில் பொது அறிவியலில் 150 வினாக்களும், ஒருவரின் சிந்தனைத்திறன், பொதுவிழிப்புணர்வு, பகுத்து ஆராயும் திறனை ஆய்வு செய்யும் வகையில் 50 வினாக்களும் என 200 வினாக்கள் கேட்கப்பட்டன. மொத்தம் 300 மதிப்பெண்கள். தேர்வு எழுதி விட்டு வந்தவர்கள் தேர்வு எளிதாக இருந்ததாக தெரிவித்தனர்.
ஆப்சென்ட் அதிகரிப்பு:
குரூப் 1 தேர்வுக்கு மொத்தம் 1 லட்சத்து 62 ஆயிரத்து 606 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதில் சுமார் 45 சதவீதம் பேர் மட்டுமே தேர்வு எழுதியுள்ளனர். அதாவது 73,173 பேர் மட்டுமே தேர்வு எழுதியுள்ளனர். 55 சதவீதம் பேர் அதாவது 89,433 பேர் ஆப்சென்ட் ஆகியுள்ளனர்.
சென்னையில் 35, 675 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இதில் 42 சதவீதம் மட்டுமே தேர்வு எழுதியுள்ளனர். அதாவது 14,983 பேர் மட்டுமே தேர்வு எழுதியுள்ளனர். 21,692 (58 சதவீதம்) பேர் தேர்வு எழுதாமல் ஆப்சென்ட் ஆகியுள்ளனர் என்று டி.என்.பி. எஸ்.சி. அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேர்வு நடந்த பல மைய ங்கள் ஆளில்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. இந்த அளவுக்கு ஆப்சென்ட் ஆகியுள்ளதை கண்டு டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இவ்வளவு பேர் ஆப்சென்ட் ஆக என்ன காரணம் என்பதை ஆய்வு செய்து வருகின்றனர்.
காரணம் குறித்து டி.என்.பி.எஸ்.சி. ஆய்வு
அடுத்த கட்டமாக மெயின் தேர்வு
முதல்நிலை தேர்வில் வெற்றி பெறுவோருக்கு அடுத்த கட்டமாக மெயின் தேர்வு நடத்தப்படும். ஒரு காலி பணியிடத்துக்கு 50 பேர் என்ற விகிதாச்சார அடிப்படையில் ஏறத்தாழ 4,000 பேர் முதன்மை தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். மெயின் தேர்வில் வெற்றி பெறுவோர் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவர். பின்னர், மெயின் தேர்வு மற்றும் நேர்முக தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மெரிட் பட்டியல் தயாரிக்கப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
3 மாதத்தில் ரிசல்ட்
டி.என்.பி.எஸ்.சி. தலைவர்(பொறுப்பு) பால சுப்பிரமணியன் அளித்த பேட்டி:
குரூப் 1 பதவியில் 79 காலி பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு நடத்தப்பட்டுள்ளது. காலி பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது என்பது அரசின் கையில்தான் உள்ளது. தேர்வுக்கான �கீ ஆன்சர்� இன்னும் 2 வாரங்களில் வெளியிடப்படும். அதில், ஏதேனும் ஆட்சேபம் இருப்பதாக தேர்வாளர்கள் தெரிவித்தால் அதுகுறித்து கமிட்டி ஆய்வு செய்து மறு �கீஆன்சர்� வெளியிடப்படும். அதன் பின்னர் தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கும். தேர்வுக்கான ரிசல்ட்டை 2 அல்லது 3 மாதங்களில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1