.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

குரூப் 1 தேர்வு பெரம்பலூர் மாவட்டத்தில் 2 மையங்களில் 706 பேர் பங்கேற்பு!1003 பேர் ஆப்சென்ட்!

Unknown | 10:06 PM | 0 comments



பெரம்பலூர், ஜூலை 21:
பெரம்பலூர் மாவட்டத்தில் 2 மையங்களில் நேற்று நடைபெற்ற குரூப் 1 தேர்வை 706 பேர் பங்கேற்று எழுதினர். 1003 பேர் வரவில்லை.
தமிழ்நாடுஅரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் குரூப் 1 முதல்நிலை எழுத்துத் தேர்வை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி, தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி வளாகம் ஆகியவற்றில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இதில் பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 400 பேரும், தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி வளாகத்தில் 1309 பேர் என மொத்தம் 1709 பேர் தேர் வெழுத விண்ணப்பித்து இருந்தனர். நேற்று இரண்டு மையங்களிலும் சேர்த்து 706 பேர் மட்டுமே தேர்வெழுதினர். 1003 பேர் தேர்வுக்கு வரவில்லை.
தேர்வு மையங்களில் பெரம்பலூர் தாசில்தார் முத்தையன், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் பிரிவு அலுவலர் சிவாஜி, உதவிபிரிவுஅலுவலர் நேரு ஆகியோர் தேர்வினை முன்னின்று நடத்தினர். ஏற்பாடுகளை தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி துணை முதல்வர் நந்தக்குமார், துறைத்தலைவர் கோவிந்தசாமி, பேராசிரியர்கள் ராஜு, செல்லப்பன், அருணாச்சலம், தலைமைஆசிரியர் ஜெயராமன் ஆகியோர் செய்திருந்தனர்.
1003 பேர் ஆப்சென்ட்
41% பேர் மட்டுமே பங்கேற்பு
பெரம்பலூரில் நேற்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் வெறும் 41.3% பேர் மட்டுமே தேர்வெழுதினர். ஒரே நாளில் வங்கி எழுத்தர் பணியிடங்களுக்கான தேர்வும் நடத்தப்பட்டதால் அதிக அளவில் தேர்வு எழுத வரவில்லை என டிஎன்பிஎஸ்சி பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1