.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

தக்காளி விலை தொடர்ந்து ஏறுமுகம்: கிலோ ரூ.60க்கு விற்பனை!

Unknown | 9:31 PM | 0 comments

சென்னை : கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி, பீன்ஸ் விலை மேலும்  உயர்ந்துள்ளது.  கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகம் மற்றும் ஆந்திரா,  கர்நாடகா, கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் இருந்து தினமும்  ஏராளமான லாரிகளில் காய்கறிகள் கொண்டு வரப்படுகிறது. கர்நாடகா,  ஆந்திரா மற்றும் ஊட்டியில் இருந்து தினமும் ஐந்து லாரிகளில் பீன்ஸ்  வந்துகொண்டு இருந்தது. தற்போது 2 லாரிகளில்தான் பீன்ஸ் வருகிறது.  இதன் எதிரொலியாக ஒரு கிலோ 30 ரூபாய்க்கு விற்ற பீன்ஸ்,  நேற்றைய நிலவரப்படி ஒரு கிலோ 70 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.   ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தில் இருந்து தினசரி 60 லாரிகளில்  வந்த தக்காளி, இப்போது 35 லாரியில் வருகிறது. இதனால் ஒரு கிலோ  40க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி, தற்போது 60 ரூபாய்க்கு  விற்பனையாகிறது.

கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்த விலை கடையில் மற்ற காய்கறிகள்  விலை விவரம் (ஒரு கிலோ ரூபாயில்): கேரட் 45, பச்சை மிளகாய் 30,  பீட்ரூட் 32, நூக்கல் 25, முட்டைகோஸ் 10, முள்ளங்கி 15,  முருங்கைக்காய் 30, உருளைக்கிழங்கு 25, சேனைக்கிழங்கு 20,  சேப்பங்கிழங்கு 25, கத்திரிக்காய் 10, அவரைக்காய் 45, புடலங்காய் 15,  சுரைக்காய் 12, சின்ன வெங்காயம் 22, பெரிய வெங்காயம் 30,  கொத்தவரங்காய் 22, காலிபிளவர் 20, சவ்சவ் 35.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1