.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

+ 2 முடித்தவர்களுக்கு தேசியப் பாதுகாப்பு அகாடமியில் வாய்ப்பு!

Unknown | 9:16 PM | 0 comments




ஒரு தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய முப்படைகளின் பங்கு மிக முக்கியமானது. தன்னலம் கருதாத, போராட்ட குணமுள்ள, தீரமிக்க இளைஞர்களே இதற்கு உயிர்நாடி. நாட்டின் முப்படைகளில் சேர, பள்ளிப் படிப்பை முடித்தவர்களுக்கு இலவசப் பயிற்சி அளித்து, பட்டம் வழங்கி, வேலையையும் அளிக்கிறது தேசியப் பாதுகாப்பு அகாடமி (நேஷனல் டிபன்ஸ் அகாதமி). இதன் வரலாறு மிக நெடியது.ராணுவத்தில் அதிகாரிகள் நிலையில் இந்தியர்களை உருவாக்க 1932-ல் டேராடூனில் இந்திய ராணுவ அகாடமி அமைக்கப்பட்டது.இரண்டாம் உலகப் போருக்குப் பின், மூன்று படைகளிலும் சேருபவர்களிடையே ஒருங்கிணைந்த பயிற்சி அளிப்பதன் அவசியம் உணரப்பட்டது. இதையடுத்து டேராடூனில் உள்ள கிளமண்ட் டவுனில் 1948, டிச.15-ல் தொடங்கப்பட்ட இணைப்பு சேவை பிரிவு (Joint services Wing), 1950 ஜனவரி 1-ல் தேசிய பாதுகாப்பு அகாடமியாகப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1954 டிசம்பரில் இது கட வாஸ்லாவுக்கு (புனே) மாற்றப்பட்டது. முத்தா நதிக் கரையோரம் 8300 ஏக்கர் பரப்பளவில் இதன் வளாகம் விரிந்து பரந்தது.

பிளஸ் டூ முடித்து தேசியப் பாதுகாப்பு அகாடமியில் சேருபவர்களுக்கு மூன்று ஆண்டுகள் பயிற்சி. இதையடுத்து ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இருந்து பி.ஏ. (வரலாறு, பொருளாதாரம், அரசியல் அறிவியல்), பி.எஸ்சி. (இயற்பியல், வேதியியல், கணிதம்), பி.ஏ. (கம்ப்யூட்டர் சயன்ஸ்) ஆகிய ஏதாவது ஒரு பாடப் பிரிவில் பட்டம் அளிக்கப்படுகிறது.கல்விப் பயிற்சியோடு உடற்பயிற்சி, ஹாக்கி, கால்பந்து, கிரிக்கெட், கைப்பந்து, கூடைப் பந்து, வாலி பால், ஸ்குவாஷ், டென்னிஸ் போன்ற விளையாட்டுகளுக்கும் பயிற்சி தரப்படுகிறது.

பயிற்சி முடிந்த பின், அவர்களின் பிரிவுக்கு ஏற்ப ராணுவம், கடற்படை, விமானப் படைப் பிரிவுகளில் சேர்க்கப்படுகின்றனர்.

எப்படிச் சேருவது?


தகுதிகள்: இந்த அகாதமியில் திருமணமாகாத ஆண்கள் மட்டுமே சேர முடியும். கல்வித் தகுதி பிளஸ் டூ. 17 முதல் 19ணீ வயதுக்குள் இருத்தல் அவசியம்.

இதற்கான தேர்வை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) நடத்துகிறது. முன்னணி செய்தித்தாள்களில் (குறிப்பாக, எம்ப்ளாய்மெண்ட் நியூஸ்) அறிவிப்பு வெளியாகும். தமிழகத்தில் சென்னை, மதுரை ஆகிய இடங்களில் நுழைவுத் தேர்வு நடத்தப்படும்.

எப்படி விண்ணப்பிப்பது?

தேர்வு முறை:

விண்ணப்பக் கட்டணம்:

பாரத ஸ்டேட் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவாங்கூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் ஹைத்ராபாத், ஸ்டேட் பாங்க் ஆஃப் ஜபல்பூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் பட்டியாலா ஆகிய வங்கிகளில் ஏடிஎம் கார்டு மூலமாக விண்ணப்பக் கட்டணமான ரூ. 100 கட்டலாம். எஸ்.சி./எஸ்.டி. ஆகிய பிரிவினருக்குக் கட்டண விலக்கு உண்டு.

விண்ணப்பிக்கும் முறை:

http://www.upsconline.nic.in/mainmenu2.php இந்த இணையள முகவரியில் நேரடியாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கக் கடைசித் தேதி:

21-07-2014 இரவு 11:59 மணிக்குள்

கூடுதல் தகவல்களுக்கு :

http://www.upsc.gov.in/exams/notifications/2014/nda2/NDA%20NA%20II%202014%20Eng.pdf
r

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1