என்ஜினீயரிங் கலந்தாய்வு தள்ளிவைப்பு:10,900 மாணவ-மாணவிகளுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல்!
என்ஜினீயரிங் கலந்தாய்வு தள்ளிவைக்கப்பட்டது குறித்து இன்று முதல் 3 நாட்களுக்கு கலந்தாய்வுக்கு வரக்கூடிய 10,900 மாணவ-மாணவிகளுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அனுப்பப்பட்டுள்ளது என்று அண்ணாபல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் மு.ராஜாராம் தெரிவித்தார்.இது குறித்து அவர் கூறியதாவது:-10,900 மாணவர்களுக்கு எஸ்.எம்.எஸ். சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு அடிப்படையில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்க இருந்த என்ஜினீயரிங் பொது கலந்தாய்வு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட சிரமத்துக்கு வருந்துகிறோம். இன்று (வெள்ளிக்கிழமை) முதல், 3 நாட்களுக்கு கலந்தாய்வுக்கு 10 ஆயிரத்து 900 மாணவ-மாணவிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு இருந்தது. அவர்களுக்கு கலந்தாய்வு தள்ளிவைக்கப்பட்ட தகவல் எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடிப்படை வசதிஇன்று காலை, முதல் கட்ட கலந்தாய்வுக்கு 270 பேர் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் சிலர் தகவல் தெரியாமல் அண்ணாபல்கலைக்கழகத்திற்கு கலந்தாய்வுக்காக வரக்கூடும். எனவே அவர்களுக்கு கழிப்பறை வசதி, குடிநீர்வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம், கலந்தாய்வு தள்ளிவைக்கப்பட்ட தகவலை தெரிவிக்க 3 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.மேலும் கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டது குறித்து அண்ணாபல்கலைக்கழக வாயில் அருகே ஆங்காங்கே அறிவிப்பு பலகைகள் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கலந்தாய்வு நடைபெறும் தேதி குறித்து ஒருங்கிணைப்புக்குழு கூடிதான் முடிவு எடுக்கமுடியும். இவ்வாறு துணைவேந்தர் மு.ராஜாராம் தெரிவித்தார்.
Category: மாணவர் பகுதி

0 comments