.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ.2½ கோடி மதிப்பிலான பல்வேறு கட்டிடங்கள் காணொலி காட்சி மூலம் ஜெயலலிதா திறந்து வைத்தார்!

Unknown | 8:49 PM | 0 comments



பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ.2.கோடியே 48 லட்சத்து 7ஆயிரம் மதிப்பிலான வெங்காய வணிக வளாகம் மற்றும் தானிய கிடங்கு களையும், 26.6லட்சம் மதிப் பிலான கால்நடை மருந்தகத்தையும் தமிழக முதல்-அமைச்சர் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வ¬த்தார்.

வெங்காய வணிக வளாகம்

பெரம்பலூர் மாவட்டம் செட்டிக்குளம் பகுதியில் ரூ.1 கோடியே 14 லட்சம் மதிப்பிலான 50 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட வெங்காய வணிக வளாகத் தினையும், 50 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட இதர காய்கனிகளுக்கான குளிர் பதன சேமிப்பு கிடங்கினையும் தமிழக முதல்-அமைச்சர் சென்னை தலைமை செயலகத் திலிருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

மேலும் வடக்கு மாதவி சாலையில் உள்ள ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் ரூ.1 கோடியே 2 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கி¢டங்கினையும், ரூ.31 லட்சத்து 8 ஆயிரம் மதிப்பீட்டில் 25 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிர் பதன சேமிப்பு கிடங்கினையும், நக்கசேலத்தில் ரூ 26 லட்சத்து 6 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கால்நடை மருந்தகத்தையும் முதல்- அமைச்சர் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

கலெக்டர் இனிப்பு வழங்கினார்

முதல்-அமைச்சர் காணொலி காட்சி மூலம் மேற்கண்ட கட்டிடங்களை தொடங்கி வைத்ததை தொடர்ந்து மாவட்ட கலெக்டர்.தரேஸ் அஹமது ஆர்.பி.மருதராஜா எம்.பி. ஆகியோர் புதிய கட்டிடங் களை பார்வையிட்டு அங் கிருந்த விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் இனிப்பு களை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள் ஜெயக்குமார், ஜெயலெட்சுமி கனகராஜ், நகர் மன்றத்தலைவர் ரமேஷ், வேளாண்மை கூட்டுறவு ஒன்றியத் தலைவர் கர்ணன், வேளாண்மை இணை இயக்குநர்அழகிரிசாமி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் இந்திரா, கால்நடைபராமரிப்புத்துறை இணை இயக்குநர் டாக்டர் சந்திரசேகர், துணை இயக்குநர் மனோகரன் உள்ளிட்ட அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1