.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

புனித ஹஜ் பயணம் சிறப்பாக அமைய மத்திய அரசு அனைத்து உதவிகளும் செய்யும் சுஷ்மா ஸ்வராஜ் உறுதி!

Unknown | 8:20 PM | 0 comments



 

புதுடெல்லி, ஜூன் 27

எண்ணிக்கையை அதிகரிக்க சவூதியிடம் பேசுவோம் புனித ஹஜ் பயணம் சிறப்பாக அமைய மத்திய அரசு அனைத்து உதவிகளும் செய்யும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா உறுதி…

புனித ஹஜ் பயணிகளுக்கான வசதிகள் மேம்படுத்தப்படும் என்று வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறினார்.

டெல்லியில் அகில இந்திய ஹஜ் பயணிகள் மாநாடு நடந்தது. இதில் சுஷ்மா ஸ்வராஜ்பேசியதாவது-ஹஜ் பயணிகளுக்கான ஏற்பாடுகளில் பல குறைகள்உள்ளதை அரசு உணர்ந்துள்ளது.

புனித மக்காவில் ஹஜ் பயணிகள் தங்குவதில் பல சிக்கல்கள் உள்ளன. இந்தப்பிரச்னைக்கு முழுமையாக தீர்வுகாணப்பட வேண்டும். மக்கா மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் இந்தியா சார்பில் தங்குமிடங்கள் கட்டவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இந்த இடங்கள், 3 மாதங்கள் ஹஜ் பயணிகளும், மற்ற 9 மாதங்களில் உம்ரா, ஜியாரத்ஆகியவற்றுக்காக செல்லும் மக்களும் பயன்படுத்தலாம். சுதந்திரத்துக்கு முன்,மெக்காவில் இந்தியாவுக்கு சொந்தமான சொத்துக்கள், கட்டிடங்கள் இருந்தன. ஹஜ்பயணிகளுக்காக இவை தானமாக வழங்கப்பட்டன. ஆனால், இன்று அந்த சொத்துக்கள் என்ன ஆனதுஎன்றே தெரியவில்லை.

இதுபற்றி விசாரணை நடத்தவேண்டும். மேலும், இந்திய ஹஜ்பயணிகளுக்கான ஒதுக்கீட்டை சவுதி அரேபியா குறைத்துள் ளது. கடந்தஆண்டு 1.70 லட்சம் இந்தியர்கள் ஹஜ் பயணம் மேற்கொண்டனர். நடப்பு ஆண்டில் 1.36 லட்சம்பேருக்கு மட்டுமே சவுதிஅரேபியா அனுமதியளித்துள்ளது. இது பற்றி சவுதி அரேபியஅரசிடம் பேசுவோம். வாழ்க்கையில் பலரும் ஒருமுறைதான் ஹஜ் பயணம் செல்கின்றனர். இதற்காக தங்கள் வாழ்நாள் முழுவதும் பணம் சேர்க்கின் றனர். அதனால், ஹஜ் பயணம் சிறப்பாக அமைய அரசு சார்பில்எல்லா உதவிகளும் செய்வோம்.

நாட்டில் 12 இடங்களில் இருந்து ஹஜ் பயணத்திற்கு விமானங்கள் புறப்பட்டு செல்கின்றன. இதில் 8 இடங்கள் தனியாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. ஹஜ் செல்லும் தனியார் விமானங்கள் மிகவும் மோசமாக உள்ளதாக புகார்கள் வந்துள்ளன. இதை அனுமதிக்க முடியாது.

மேலும் மற்ற இடங்களிலிருந்து ஹஜ்ஜுக்கு சென்றால்ரூ.62,802 கட்டணமாக வசூலிக்கும் ஏர் இந்தியா நிறுவனம், காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரிலிருந்து சென்றால் மட்டும் ரூ. 1.54லட்சம் வசூலிப்பது கண்டிக்கத்தக்கது. இதுதவறு.

மக்காமற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் இந்தியர்கள் தங்குவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள கட்டிடங்களில் வசதிகள் இல்லை என்றும் புகார் வந்துள்ளது. இந்திய ஹஜ் கமிட்டியும்,சவுதி அரேபியாவில் உள்ள நமது தூதரகமும், இந்திய பயணிகள் தங்குமிடங்களில் அடிப்படைவசதிகள் உள்ளதா என்பதைஉறுதி செய்ய வேண்டும்.

ஹஜ்யாத்திரையை சந்தோஷமாக மேற்கொள்ளும் பலர் திரும்பும்போது ஏமாற் றத்துடன் திரும்புவதை பார்த்திருக்கிறேன். அப்படியொரு நிலை இனி ஏற்ப டாது. இவ்வாறு சுஷ்மா ஸ்வராஜ் பேசினார்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1