பெரம்பலூர் நகர மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற பாடுபடுவேன்: மருதராஜா M.P. உறுதி!
பெரம்பலூர், ஜூன். 27.
பெரம்பலூர் நகர பகுதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி அரணாரையில் துவங்கியது. நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். எம்எல்ஏ தமிழ்செல்வன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார்.
இதை தொடர்ந்து பெரம்பலூர் துறைமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள 21 வார்டுகளிலும் அதிமுகவிற்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு எம்பி மருதராஜா நன்றி தெரிவித்து பேசினார்.
அப்போது கிராமங்களில் அடிப்படை தேவைகளை நிறைவேற்றவும் கிராமங்களில் வளர்ச்சியடையும் கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
Category: மாவட்ட செய்தி


0 comments