வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய குழுவின் சாதாரண கூட்டம் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது!
வேப்பந்தட்டை,
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய குழுவின் சாதாரண கூட்டம் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய குழுத்தலைவர் ஜெய லெட்சுமி கனகராஜ் தலைமை தாங்கினார். துணை தலைவர் வேலுசாமி, வட்டார வளர்ச்சி அதிகாரிகள் தமிழரசி, பழனிசாமி முன்னிலை வகித்தார்கள். கூட்டத் தில் வரவு செலவு கணக்குகள் வாசிக்கப்பட்டு கீழ்கண்ட சில தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன 66–வது பிறந்த நாள் விழா காணும் தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவிற்கு பாராட்டுதலையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வது, பெரம்பலூர் மாவட் டத்தில் தொடர்ந்து 3–வது ஆண்டாக புத்தக திருவிழா நடத்திய மாவட்ட கலெக்டருக்கு பாராட்டுதலை தெரிவித்து கொள்வது, கிருஷ்ணாபுரத்தில் உள்ள அரசு வட்டார தலைமை மருத்துவமனையில் 24–மணி நேரமும் டாக்டர்கள் தங்கி பணிபுரியும் வகை யில் கூடுதல் டாக்டர்களை நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கோடை காலம் நெருங்கி வருவதால் 29 ஊராட்சிகளிலும் கூடுதலாக கிணறு மற்றும் ஆழ்துளை குழாய் அமைத்து குடிநீர் பஞ்சம் ஏற்படாத வகையில் முன்னேற்ப்பாடுகளை செய்வது, வேப்பந் தட்டையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைப்பதற்கு 10 ஏக்கர் நிலம் பெற்று தந்த ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் பொது மக்களுக்கு பாராட்டுதலை தெரிவித்துக் கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மற்றும் யூனியன் அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அறிவழகன் நன்றி கூறினார்.

Category: மாவட்ட செய்தி
0 comments