பெரம்பலூர் நகரில் விபத்துக்களை ஏற்படுத்தும் குண்டும், குழியுமான சாலைகளை சீரமைக்க பொதுமக்கள் வேண்டுகோள்!
பெரம்பலூர்,
பெரம்பலூர் நகரில் விபத்துக்களை ஏற்படுத்தும் குண்டும், குழியுமான சாலைகளை சீரமைக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
போக்குவரத்து நெருக்கடி
பெரம்பலூர் காமராஜர் வளைவு முதல் சங்குப்பேட்டை முதல் பிரதான சாலையில் பனிமயமாதா காலனி –கம்பன் தெரு சந்திப்பு பகுதியில் சாலையின் நடுவே பள்ளங்கள், குழிகள் ஏற்பட்டுள்ளன.
பெரம்பலூர் புறநகர் பஸ் நிலையம்–ஆத்தூர் சாலையில் வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் சென்று வருகின்றன. காலை 8.30 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரையிலும் இந்த சாலை யில் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
அடிக்கடி விபத்து
இந்த பிரதான சாலையில் உள்ள பள்ளங்களில் வேகமாக செல்லும் இருசக்கர வாகனங் கள் திடீரென்று ஏறி இறங்கும் போது வேகத்தை கட்டுப் படுத்த முடியாமல் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகின் றன. சங்குப்பேட்டை சிக்னல் பகுதியிலும் சாலையின் நடுவே அதிக அளவில் குழிகள் உள்ளன.
நகரின் பிரதான சாலைகளில் பல இடங்களில் இதுபோன்று குழிகள் இருந்து வாகனங்களில் செல்வோரை பாதிப்பிற்கு உள்ளாக்கி வருகின்றன.
சரி செய்ய கோரிக்கை
கடந்த பல மாதங்களாக இந்த நிலை தொடர்ந்து இருந்துவருகிறது. இதனை நெடுஞ்சாலைத்துறையினர் கண்டு கொள்ளாததால், சிறுசிறு விபத்துக்கள் தொடர்ந்து இருசக்கர வாகனங்களில் செல்வோரை கவிழ்த்து, காயம் ஏற்படுத்தி விடுகின்றன.
பெரிய அளவில் விபத்துக் கள் நிகழ்வதற்கு முன்பாகவே சாலையில் உள்ள குழிகள், பள்ளங்களை சமப்படுத்தி சாலையை மராமத்து செய்திட வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Category: மாவட்ட செய்தி
0 comments