இந்தியாவில் சப்தமில்லாமல் நடைபெறும் வன்முறைகள்!
உலகில் குறிப்பாக இந்தியாவில் சப்தமில்லாமல் நடைபெறும் வன்முறைகள் குறித்து அறிந்து கொள்வோம்.
- இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 23 லட்சம் குழந்தைகள் பலியாவதாக யுனிசெப் நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் பாதி குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பலியாகின்றன.
- உலகில் தினமும் 17,000 குழந்தைகள் பலியாகின்றன என ஐ.நா. சபை அறிக்கை வெளியிட்டு இருக்கின்றது.
- சோமாலியாவில் உணவிற்காக ராணுவத்துடன் சண்டையிட்டு 7 பேர் பலி.
- மராட்டியத்தில் உணவின்றி தற்போதைய நிலவரப்படி 9000 குழந்தைகள் பலி..
இந்தியாவில் பஞ்சம்... வரலாற்றிலிருந்து...
- பிரிட்டிஷ் ஆட்சியில் பஞ்சத்தின் போது ஆளுநர் சொன்ன வார்த்தை .."இந்தியர்கள் அதிகமாக உணவு உண்டதால் பஞ்சம் வந்தது".
- பிரிட்டிஷ் காலத்தில் இந்தியாவில், ஊனமுற்ற குழந்தைகளுக்கு மட்டுமே பஞ்சகாலத்தில் உணவு தரப்பட்டது.
- மற்றவர்களுக்குக் கடுமையான வேலைகளுக்குப் பின்பு 1 அணாவும், 450 கிராம் தானியமும் தரப்பட்டது..
- பஞ்ச காலத்தில் காட்டு நெல்லை விளைய வைத்து அதை உண்டனர். காடுகளில் விளையும் கிழங்குகளை விஷம் என அறியாமல் உண்டு மாண்டுள்ளனர்.
- எறும்பு புற்றுகளில் எறும்புகள் சேமிக்கும் உணவுகளைத் தேடி மக்கள் அலைந்தனர்.
- 18 ஆம் நூற்றாண்டு முதல் இந்தியாவில் தொடர்ந்த பஞ்சம், 1942 ஆம் ஆண்டுகளில் ஒரிசா மற்றும் வங்காளத்தைத் தாக்கிய புயல்,தொற்றுநோய்களால் வந்த பஞ்சத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை 30 லட்சம்.
- இரண்டு உலகப்போர்களில் இறந்த மக்களின் எண்ணிக்கையைவிட இந்தியாவில் பசியால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகம்.
- ஆங்கிலேயர் சர்ச்சிலிடம் இந்திய பஞ்சத்தை பற்றியும் மக்கள் பசிகொடுமையால் மடிவது பற்றியும் வினவிய போது, "பின் ஏன் இன்னும் காந்தி சாகவில்லை"? என்று பதில் தந்தார்.
- பிரிட்டிஷார் இந்தியாவை விட்டு செல்ல பஞ்சமே காரணம் என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது.
- எழுத்தாளர் மற்றும் விஞ்ஞானியான மதுஸ்ரீ முகர்ஜி, "30 லட்சம் மக்கள் சாக காரணம் உணவு பதுக்கலும், சர்ச்சிலும்தான்" என குற்றம் சாட்டுகின்றார்.
- எழுத்தாளர் ஜெயபாரதி பஞ்சம் பற்றி எழுதுகையில் "பசியின் மூலமாக சுதந்திர போராட்ட உணர்வு ஒடுக்கப்படுகிறது" என குறிப்பிடுகின்றார்..
பஞ்சம் ஏற்பட முக்கிய காரணங்கள்
- இந்திய நீர்ப் பாசன முறைகளை நிர்வகிப்பதிலும் மேம்படுத்துவதிலும் ஏற்பட்ட குளறுபடிகள்.
- பெருமளவிலான தானிய ஏற்றுமதி மற்றும் சந்தையைத் தனதாக்கிக்கொண்ட காலனிய ஏகாதிபத்திய முயற்சி.
- மிதமிஞ்சிய வரிச் சுமை.
- பணப் பயிர்களை முதன்மைப்படுத்தி விவசாயத்தில் ஏற்பட்ட மாற்றம்.
தற்போதைய நிர்வாக முறைகள் பஞ்சத்தைப் போக்குமா?
- "வறியவன் இன்னும் வறியவனாக சாவான்; வலுத்தவன் இன்னும் வலிமையானவன் ஆவான்." இதுதான் முதலாளித்துவ நிர்வாக முறை உலகிற்குக் காட்டியுள்ள ரிசல்ட்!
- இந்தியாவில் தற்கொலை செய்த 1 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகளின் அழுகை சப்தம், கிரிமினல் பின்புலமுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்வில் வெளியே கேட்காமலே ஓய்ந்துவிட்டது.
- வறியவனின் உணர்வுகளை, ஜனநாயகத்தின் மற்றொரு முக்கிய தூணான ஊடகங்கள் படம் பிடிப்பது இல்லை; கார்ப்பரேட்டுகளின் வயிற்றினை வளர்ப்பதற்கே அவை முக்கியத்துவம் கொடுக்கின்றன!
- "தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில், இந்த ஜகத்தினை அழித்திடுவோம்" என புரட்சி முழக்கமிட்டவனின் குரல்களெல்லாம் வெறும் ஏட்டிலேயே முடங்கிவிட்டன!
- முதலாளித்துவத்தின் கைப்பிடியில் சிக்கியுள்ள இந்திய ஜனநாயக அரசியல் கட்சிகளை நம்பினால் "பசியிலிருந்தும் விடுதலை இல்லை; பயத்திலிருந்தும் விடுதலை இல்லை" என்பது தெளிவாகின்றது..
இந்தியாவில் பஞ்சங்களும் விவசாயிகளின் தற்கொலைகளும் சப்தமில்லாத வன்முறைகளாக தொடர்கின்றன! தீர்வெழுதப்படுவது எப்போது?
- அபுஷேக் முஹம்மது, துபை
Category: மாநில செய்தி
0 comments