.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

விமான கருப்பு பெட்டி பற்றிய தகவல்கள்!

Unknown | 9:27 PM | 0 comments

விபத்துக்குள்ளான விமானம் குறித்து முழு விபரங்களையும் அறிவதற்கு உதவியாக இருப்பது கருப்புப் பெட்டியாகும். விமானத்தின் விவரங்கள் பதிவு சாதனம் ( ATR ) என்பதே கருப்புப் பெட்டி என அழைக்கப் படுகிறது.

இந்த பெட்டியின்மீது பல அடுக்குகளாக எக்கு தகடுகள் சுற்றப்பட்டு இருக்கும். அதனால், விமானம் மோதினாலோ, தீ பிடித்தாலோ, தட்ப வெட்ப நிலையில் அதிகபட்ச்ச மாற்றம் ஏற்பட்டாலோ எந்த பாதிப்பும் கருப்புப் பெட்டிக்கு ஏற்படாது.

மேலும் எத்தகைய விபத்து ஏற்பட்டாலும் பாதுகாப்பான பகுதியாக கருதப்படும் விமானத்தின் வால் பகுதியில் இந்த பெட்டி பொருத்தப் பட்டு இருக்கும். இவ்வளவு பாதுகாப்பான பகுதியில் அமைந்துள்ள கருப்பு பெட்டியில் விமானம் பறந்த உயரம், வேகம், நேர்குத்து இயக்கம், விமானத்தின் இடம் என விமானத்தை பற்றிய உண்மையான நிலவரங்கள் பதிவாகிக் கொண்டு இருக்கும். எனவே விபத்து நடந்த போது நிலவிய சூழ்நிலையை தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.


இதுதவிர கருப்புப் பெட்டியின் மற்றொரு பிரிவில் ஒலிப் பதிவு கருவியும் உண்டு. விமானத்தில் உள்ள பைலட்டுகள் அறையில் நடந்த உரையாடல், அங்கு ஏற்படும் ஒலிகள், பைலட்டுகளின் குரல்கள், எஞ்ஜினின் இரைச்சல் என அனைத்துவித சப்தங்களும் அதில் பதிவாகிவிடும். இதன் மூலமாக விபத்து நடந்த போது பரிமாறப் பட்ட தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த்தாக இருப்பதாலேயே விபத்து நடந்த உடனேயே, விமானத்தின் கருப்புப் பெட்டியை தீவிரமாக தேடுகின்றனர். மேலும், சாலை விபத்துகளைக் கண்டறிவதற்குக் கூட, வாகனங்களில் அப்பெட்டி பொருத்தப்படுகிறது.

David Warren, inventor of the black box flight recorder, in the cockpit of a Boeing 747ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டேவிட் வாரனின் அப்பா, ஆஸ்திரேலிய விமான ஆராய்ச்சி ஆய்வகத்தில் ஆய்வு விஞ்ஞானியாக பணிபுரிந்தவர்.

1934ல் ஒரு விமான விபத்தில் பலியானார். கடந்த 1953ல் "காமெட்' என்ற ஜெட் விமானம் விபத்துக்குள்ளான போது, அது பற்றிய விசாரணையில் டேவிட் வாரனும் ஈடுபட்டு உதவினார். அப்போதுதான் இதுபோன்ற விமான விபத்துகளைக் கண்டறியும் ஒரு கருவியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற முடிவுக்கு அவர் வந்தார்.


அதன் பின், 1956ல் அவர் கறுப்புப் பெட்டியைக் கண்டுபிடித்து வெளியுலகுக்கு அறிவித்தார். இருப்பினும் அவரது கண்டுபிடிப்பின் முழுப் பரிமாணம் மற்றும் பயனை உணர்ந்து அதை விமானங்களில் பொருத்த மேலும் ஐந்தாண்டுகள் தேவைப்பட்டன. அவரது கண்டுபிடிப்பு, உலக விமானப் போக்குவரத்தின் பாதுகாப்பான பயணத்துக்கு ஒப்பற்ற பங்காக கருதப்படுகிறது.

உலகிலேயே விமானத்தில் கருப்புப் பெட்டி பொருத்துவதை முதன் முதலில் கட்டாயமாக்கியது ஆஸ்திரேலியாதான். 1960 – ம் ஆண்டில் அது அமலுக்கு வந்தது. கருப்புப் பெட்டி என அழைத்தாலும் அதன் உண்மையான நிறம் ஆரஞ்சு என்பது குறிப்பிடத்தக்கது. விபத்துக்கு பிறகு எளிதாக அடையாளம் காண்பதற்காக அந்த பெட்டியின் மீது சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறத்தில் பெயின்ட் அடிக்கிறார்கள்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1