பொதுமக்கள் சுற்றிவளைத்ததால் திருட வந்த வீட்டுக்குள் தூக்கிட்டு திருடன் சாவு!
ஒட்டன்சத்திரம் : திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள ஆனைமலையான்பட்டியை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மனைவி சின்னகருப்பத்தாள். இவர்கள் தோட்டத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகின்றனர். கணவன், மனைவி இருவரும் நேற்றுமுன்தினம் இரவு வீட்டில் இருந்து சற்று தூரத்தில் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர். அப்போது ஒரு மர்மநபர் வீட்டுக்குள் நுழைந்ததை சின்னகருப்பத்தாள் கவனித்துவிட்டார். வீட்டின் அருகே சென்று பார்த்தபோது, அந்த மர்மநபர் பீரோவை திறப்பதை பார்த்து, கதவை வெளிப்புறமாக பூட்டிவிட்டார்.பின்னர் அவர்கள் அருகில் இருந்தவர்களை அழைத்தனர். பலர் வீட்டின் முன் கூடிவிட்டனர்.
வீட்டைச் சுற்றி கூட்டம் கூடி விட்டதை அறிந்த மர்மநபர், இனி தப்பிக்க முடியாது என்பதை அறிந்து, வீட்டில் இருந்த சேலையை விட்டத்தில் மாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கதவை திறந்து உள்ளே சென்றவர்கள் திருட வந்த மர்ம ஆசாமி தூக்கில் தொங்கியது பார்த்து திடுக்கிட்டனர்.இதுகுறித்து அம்பிளிக்கை போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு விசாரணை நடத்தினர். இதில் அந்த நபர் அம்பிளிக்கை அருகேயுள்ள ஒத்தையூரை சேர்ந்த பெரியசாமி (40) என்பதும், இவர் மீது ஏற்கனவே பல திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது.

Category: மாநில செய்தி
0 comments