மலேசியாவில் அகரம் இளைஞர் கைது .அதிர்ச்சியில் மனைவி தற்கொலை இறுதி சடங்குக்கு அழைத்து வர கலெக்டரிடம் உறவினர் முறையீடு!
பெரம்பலூர், பிப். 4:
மலேசியாவில் கணவர் சிறை வைக்கப்பட்ட அதிர்ச்சியில் மனைவி தற்கொலை செய்து கொண்டார். அவருடைய உடலுக்கு இறுதி சடங்கு செய்ய மலேசியா சிறையில் இருக்கும் கணவர் தமிழகம் திரும்ப ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் இறந்த பெண்ணின் தாய் மற்றும் உறவினர்கள் மனு அளித்தனர்.
பெரம்பலூர், பிப். 4:
மலேசியாவில் கணவர் சிறை வைக்கப்பட்ட அதிர்ச்சியில் மனைவி தற்கொலை செய்து கொண்டார். அவருடைய உடலுக்கு இறுதி சடங்கு செய்ய மலேசியா சிறையில் இருக்கும் கணவர் தமிழகம் திரும்ப ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் இறந்த பெண்ணின் தாய் மற்றும் உறவினர்கள் மனு அளித்தனர்.
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில் பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா அயன்பேரையூர் கிராமத்தை சேர்ந்த இளையபெருமாள் மனைவி பாப்பாத்தி மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:
நான் அயன்பேரையூர் கிராமத்தில் வசித்து வருகி றேன். எனது மகள் சுதாவை (25) 7ஆண்டுகளுக்கு முன்பு, இனாம்அகரம் கிரா மத்தை சேர்ந்த செல்லையா என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தேன். மரு மகன் செல்லையா 3 ஆண்டுகளாக மலேசியாவில் தோட்ட வேலை செய்து வந் தார். அங்கு ஆண்டுக்கு ஒரு முறை நடைபாஸ் புதுப்பிக்க வேண்டும்.
தங்கியுள்ள இடத்தில் இருந்து வெளியில் செல்ல இந்த பாஸ் முக்கியம். இந்த நிலையில் இவர் 2 மாதங்களுக்கு முன்பு நடைபாஸ் இல்லாமல் வெளியே சென்றுள்ளார். இதனால் செல்லையாவை மலேசியா போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த தகவலை செல்லையா நண்பர், போன் மூலம் எங்களுக்கு தெரிவித்தார். மேலும், ரூ.50 ஆயிரம் அபராதத்தொகை செலுத்தினால் தான் அவரை மலேசியா சிறையில் இருந்து விடுவிப்பார்கள் என்றும் கூறினார். இதனை கேட்ட எனது மகள் சுதா மனமுடைந்து 27ம்தேதி விஷம் குடித்தார்.
அவர் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக் காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைஅளித்தும் பலனி ன்றி சுதா 3ம் தேதி அதி காலை 1.15மணிக்கு இறந்துவிட்டார். அவரது இறுதிச் சடங்கை மேற்கொள்ள மரு மகன் செல்லையா மலே சியா நாட்டிலிருந்து வந்தாக வேண்டும். எனவே கருணை கூர்ந்து மலேசிய நாட்டு தூதரகத்திற்கு பேசி செல்லையா நாடு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.
மனுவை டிஆர்ஓ சுப்ரமணியன் பெற்று கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொ) மலையாளத்திடம் அளித் தார். இதுதொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுத்து செல்லையா நாடு திரும்ப ஏற்பாடு செய்யும்படி உத்தரவிட்டார்.
Category: மாவட்ட செய்தி
0 comments