தமிழகம்&ஜப்பான் கூட்டுத் திட்டத்தில் 100 டன் குப்பையில் இருந்து 1 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கலாம் கருத்தரங்கில் தகவல்!
சென்னை, பிப். 5:
குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் கருத்தரங்கு சென்னையில் நேற்று நடந்தது. இதில் திருச்சி மாநகராட்சி ஆணையர் தண்டபாணி, ஜப்பான் நாட்டை சேர்ந்த ஓநாகாவா, கோஜி சுகியாமா, டாக்ஷி கியாமா, திருச்சி ஜிபி இன்ஜியரிங் பட்டாபிராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஜப்பான் கம்பெனியுடன் இணைந்து குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதுதொடர்பாக ஜப்பான் நாட்டை சேர்ந்த ஓநாகாவா கூறுகையில், ஜப்பானில் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் நல்ல முறையில் இயங்கி வருகிறது. இதனை மற்ற நாடுகளிலும் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தியாவில் தமிழகத்தில் இதற்கான முதல் கட்ட பணிகள் நடந்து வருகிறது என்றார். திருச்சியை சேர்ந்த ஜி.பி. இன்ஜினியரிங் நிறுவனத்தினர் கூறுகையில், திருச்சி மற்றும் திருப்பூரில் பணிகள் துவங்க வாய்ப்புள்ளது. 100 டன் குப்பையில் ஒரு மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என்றார்.
இந்தியா &ஜப்பான் இணைந்து குப்பை கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தொடர்பான அறிமுக கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது.
Category: மாநில செய்தி
0 comments